ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது | Don’t judge anyone by their appearance | short stories tamil

ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது | Don’t judge anyone by their appearance | short stories tamil

அடர்ந்த காடு ஒன்றில் இருந்த குகையில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அந்த காட்டில் இருந்த முயல், மான், காட்டெருமை போன்ற விலங்குகளை அது வேட்டையாடி தின்று வந்தது. 

அது ஒரு நாள் வழக்கம் போல் காட்டெருமை ஒன்றை வேட்டையாடி வயிறு நிறைய அதன் இறைச்சியை தின்றுவிட்டு தன் குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. 

அப்போது அந்த குகையின் ஒரு மூலையில் வசிக்கும் எலி ஒன்று சிங்கத்தின் உடலை ஒரு பாறை என்று எண்ணிக்கொண்டு, அதன் முதுகில் ஓடியாடி விளையாடியது. இதனால் சிங்கத்தின் தூக்கம் கெட்டது. 

அது கண் விழித்து எலியை பிடித்துக் கொண்டது. பிறகு அது எலியை பார்த்து “சிறிய ஏலியே, நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் மீது ஏறி விளையாடி என் தூக்கத்தை நீ கலைத்து விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார். 

உன்னை என் வாயில் போட்டு மென்று விடுகிறேன்” என்றது. எலிக்கு பயத்தால் உடல் நடுங்கியது. அது தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிங்கத்தை பார்த்து, “சிங்கராஜா, என்னை எதுவும் செய்து விடாதீர்கள். 

உங்கள் உடம்பை கல் என்று நினைத்து விளையாடிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்னை தயவு செய்து மன்னித்தால், நான் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுகிறேன்.” என்றது. 

எலி பேசுவதை கேட்ட சிங்கம், கடகட என காடே அதிரும்படி சிரித்தது. அது எலியை பார்த்து, “எலியே, நீ பொடிப்பயல். சின்னஞ்சிறிய உடல் கொண்ட உன்னால் மலைபோல் தோற்றமும் கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?” 

short stories tamil

நான் இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பதால், உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். மேலும் அற்ப உருவம் கொண்ட உன்னை நான் சாப்பிடுவதால் எனக்கு தான் அவமானம். பிழைத்துப் போ, என்று கூறிவிட்டு எலியை விட்டது. 

எலி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதன் இடத்தில் சென்று புகுந்து கொண்டது. ஒரு நாள் சிங்கம் வழக்கம்போல் வேட்டையாட புறப்பட்டது. நெடு நேரமாகியும் அதற்கு இறை எதுவும் கிடைக்கவில்லை. 

அது சோர்ந்து போனது. அது வேட்டையாடிக்கொண்டே நடுக்காற்றுக்கு வந்து விட்டது. அங்கே ஓரிடத்தில் வேட்டைக்காரர்கள் மிருகங்களை பிடிப்பதற்காக வலை விரித்து வைத்திருந்தனர். 

சிங்கம் அந்த விலைக்குள் சிக்கிக்கொண்டது. காடே அதிரும்படி கர்ஜித்தது, எவ்வளவோ முயன்றும் அதனால் அந்த வலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் கோபத்தால் கர்ச்சித்துக் கொண்டே இருந்தது. 

இந்த சத்தம் வலையில் உறங்கிக் கொண்டிருந்த எலியின் காதில் விழுந்தது. அது உடனே விரைந்து ஓடி வந்தது. சிங்கம் சிக்கி இருந்த வலையை தன் கூர்மையான பற்களால் கடித்து சிங்கத்தை விடுவித்தது. 

அப்பொழுது சிங்கம் எலியை பார்த்து, “எலியாரே, அன்று நீ என் தூக்கத்தை கலைத்த போது உன்னை கொல்லாமல் விட்டேன். அப்பொழுது நீ தக்க சமயத்தில் உதவுவதாக வாக்களித்தாய், அப்பொழுது நான் சிறிய உருவம் கொண்ட உன்னால் பெரிய உருவமும், கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?” என்று ஏளனமாக பேசினேன். 

உருவத்தில் மிகவும் சிறியவனான நீதான் இன்று என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். உன் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். உன் உதவிக்கு நன்றி என்று கூறியது. 

இரண்டுமே பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடந்தன. 

நீதி: ஒருவருடைய உருவத்தை பார்த்து அவரால் நமக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று நினைக்க கூடாது. உருவத்தில் சிறியவராக இருப்பவரிடம் திறமை அதிகமாக இருக்கும். எனவே அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.
1 thought on “ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது | Don’t judge anyone by their appearance | <a href="https://smr.seotooladda.com/analytics/keywordoverview/?q=short%20stories%20tamil&db=us" target="_blank" rel="noreferrer noopener">short stories tamil</a>”

Leave a Comment