சிட்டுக்குருவியும் காகமும் | Sparrow and Crow | Kids Tamil Story

சிட்டுக்குருவியும் காகமும் | Sparrow and Crow | Kids Tamil Story

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.

அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.

அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.

Kids Tamil Story

இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். சிட்டுக்குருவி விவசாயிடம் சொன்னது, “ஐயா… நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் இந்த மரத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் உங்களுடைய நிலத்தில் உள்ள எந்த சோளத்தையும் நான் உண்ணவில்லை” என்றது.

ஆனால் விவசாயி அந்த சிட்டு குருவியின் பேச்சை கேட்காமல் அந்த கம்பை எடுத்து சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 

 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை சற்று கேட்க வேண்டும்.
Leave a Comment