புகழ்ச்சி மயக்கமும் ஓநாயின்  முடிவும் | The fox’s decision towards the praise of lamb | Tamil Story in Tamil

புகழ்ச்சி மயக்கமும் ஓநாயின் முடிவும் | The fox’s decision towards the praise of lamb | tamil story in tamil

ஒரு பெரிய பண்ணையில் ஓர் ஆட்டு மந்தை வசித்து வந்தது. மேய்ச்சலுக்கு அவை செல்லும்போது அவற்றை வேட்டை நாய்கள் பாதுகாக்கும். அருகில் இருந்த காட்டில் ஓநாய் கூட்டம் இருந்தது. புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் வெள்ளாடுகளை குறிவைத்து ஓநாய்கள் சுற்றி சுற்றி வரும். சமயத்தில் மந்தையிலிருந்து பிரிந்து வரும் சில ஆடுகளைக் கொன்று தின்னும். ஓநாய்களிடமிருந்து வெள்ளாடுகளை பத்திரமாக பாதுகாக்க முடிந்த வரையில் இந்த நாய்கள் பாடுபடும்.

ஒரு நாள் ஒரு வெள்ளாட்டுக் குட்டி மற்ற ஆடுகள் புல்லை மேய்ந்து கொண்டு இருக்கும்போது மந்தையிலிருந்து பிரிந்து வந்தது. அந்த குட்டி தான் தனியாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தது. காட்டை அது நெருங்கிய போது ஓர் ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்து விட்டது. அது குட்டியை நெருங்கியது. ஓநாயை பார்த்தவுடன் குட்டிக்கு மிகவும் பயம் ஏற்பட்டது. இந்த ஓநாயைப் பற்றி ஆட்டுக்குட்டியின் தாய் பலமுறை எச்சரித்து இருந்தது.

tamil story in tamil

ஆட்டுக்குட்டியின் அருகில் சென்று ஓநாய் கூறியது, “குட்டியே! உன் இருப்பிடத்தை விட்டு அதிக தூரம் நீ வந்து விட்டாயே! இது புத்திசாலித்தனமான செயலன்றே”.

 ஆட்டுக்குட்டி நடுங்கும் குரலில், “ஆமாம், நான் விளையாட்டுத்தனமாக இருந்திருக்கக் கூடாது; இப்படி மந்தையை விட்டு வந்து விட்டேனே!” என்றது. “நீ சொன்னது சரி; அதற்கான தண்டனை நீ இப்போது அனுபவிக்க வேண்டும். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. அதனால், நான் இப்போது உன்னை சாப்பிட போகிறேன்,” என்று ஓநாய் கேலியாக சொன்னது.

ஆட்டுக்குட்டி மிகவும் பயந்து போயிற்று; என்றாலும் அது புத்திசாலி. தன்னை எவ்வாறாவது ஓநாயிடமிருந்து இப்போது காத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு புரிந்தது. அது ஓநாயிடம் சொன்னது, “நான் ஒரு பெரிய தப்பு செய்து விட்டேன் என்பது எனக்கு புரிகிறது ஆனால், என்னை தின்பதற்கு முன்னால் நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும்.”

பொறுமை இழந்த ஓநாய், “என்ன அது?” என்று கேட்டது.

“நீ மிக நன்றாக பாடுவாய்; தவிர புல்லாங்குழலை இனிமையாக வாசிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அமைதியாக கேட்க வேண்டுமே!” என்று ஆட்டுக்குட்டி அதனிடம் கூறியது.

இந்த புகழ்ச்சி ஓநாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. “எப்படியாக இருந்தாலும் நான் உன்னை தின்ன போகிறேன். அதனால், உன் கடைசி ஆசையை நிறைவேற்றுவதால் ஒரு தீங்கும் வராது என்று நம்புகிறேன்,” என்று கர்வமாக ஓநாய் ஆட்டுக்குட்டிக்கு பதிலளித்தது. பிறகு சத்தமாக பாட ஆரம்பித்தது; புல்லாங்குழலையும் வாசித்தது.

tamil story in tamil

வேட்டை நாய்கள் மந்தையை சுற்றி வரும்போது ஓநாயின் பாட்டையும் புல்லாங்குழலின் இசையையும் கேட்டன.

அவை மந்தையை நன்றாக சுற்றிப் பார்த்தன. சிறிய வெள்ளாட்டுக் குட்டியை மந்தையில் காணும். உடனே அந்த  குட்டிக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று நாய்கள் புரிந்து கொண்டன. காட்டின் எல்லை பகுதிக்கு பாட்டு வந்த திசையை நோக்கி வேகமாக அவை ஓடின. ஓநாய் அப்போது தன் பாடலை முடித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நாய்கள் அதை நோக்கி வேகமாக வந்தன, வந்த வேகத்தில் ஓநாயை கடித்து குதறி எடுத்தன. உடம்பில் பட்ட காயங்களோடு ஓநாய் அங்கிருந்து தப்பி ஓடியது.

அந்த குட்டிக்கு தன் திட்டம் நிறைவேறியதால் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அன்றிலிருந்து குட்டி ஆடு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது; தவிர, வயது முதிர்ந்த வெள்ளாடுகள் கூறுவதை கேட்டு அதன்படியே நடந்தது.

நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.




Leave a Comment