நரியும் கரடியும் | moral tamil story
ஒரு ஊரில் நரியும் கரடியும் நட்பாய் பழகி வந்தனர். இந்த நரி எப்போதுமே அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் கரடியிடம் அது சொன்னது,” நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்” என்று கேட்டது. அதற்கு அந்தக் கரடியும்,”சரி நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்யலாம்” என்றது.
அப்போது இருவரும் சேர்ந்து ஒரு வயலை தேர்ந்தெடுத்தார்கள். அந்த வயலை நன்றாக சுத்தம் செய்து உழுதார்கள். விதைப்பதற்கு முன்பு நரி கரடியிடம் சொன்னது,” நண்பா இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அணைத்தேன் நான் எடுத்துக் கொள்கிறேன், நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது .அதற்கு அந்த கரடியும் சம்மதித்தது.
இந்த நரி மிகவும் தந்திரமானது. எனவே சோழ விதையை விதைத்தது அறுவடை காலம் வந்த பிறகு இருவரின் ஒப்பந்தம்படி நிலத்திற்கு மேல் விளைந்த அனைத்து சோழ வகைகளை நரி எடுத்துக்கொண்டது. ஆனால் கரடிக்கோ வெறும் வேர்கள் மட்டும்தான் மிஞ்சியது. எனவே கரடி நரியிடம் சொன்னது ,”நண்பா போன முறை நீ நிலத்திற்கு மேல் உள்ள அனைத்து விளைச்சலையும் எடுத்து விட்டாய், எனவே இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன் நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது.
அதற்கு அந்த நரி சிரித்துக் கொண்டே சம்மதித்தது. இந்த முறை நரி தந்திரமாக நிலக்கடலையை விதைத்தது. இந்த முறையும் விளைச்சல் நன்றாக இருந்தது நிறைய நிலக்கடலைகள் கிடைத்தன. அந்த கரடி சொன்னபடி நிலத்திற்கு மேல் உள்ள அனைத்தையும் கரடி எடுத்துக் கொண்டது நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது. எனவே கிடைத்த நிலக்கடலைகள் அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது.
இப்போது இந்த கரடிக்கு நரியின் தந்திரம் புரிந்து கொண்டது. எனவே அது நரியிடம் நட்பாக பழகுவதை நிறுத்திவிட்டு தானே தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது.
நீதி: தீய எண்ணம் உடையவர்களிடம் நட்பாக பழகக் கூடாது.