எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு | Buffalo and mischievous monkey | Tamil story for kids with moral

எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு | Buffalo and mischievous monkey | Tamil story for kids with moral

ஒரு காட்டிற்குள் நிறைய விலங்குகள் ஒன்றாக வசித்து வந்தன. அதில் எருமை ஒன்றும் இருந்தது, அது பார்க்க மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, அந்த எருமையை பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் பயப்படும். ஆனால் இந்த எருமை மிகவும் சாதுவானது யாரையும் அது கஷ்டப்படுத்தியதில்லை.

அந்தக் காட்டில் ஒரு குரங்கு மரத்தில் வசித்து வந்தது. அந்தக் குரங்கு இந்த எருமையை எப்போதும் கேலி செய்து கொண்டும், தொந்தரவு செய்து கொண்டும் இருக்கும். இதை ஒரு சிட்டுக்குருவி பார்த்துக்கொண்டு எருமையிடம் கேட்டது,” அது உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கிறதே நீ அதை பதிலுக்கு எதுவும் செய்யாமல் இப்படி அமைதியாக இருந்தால் மீண்டும் மீண்டும் குரங்கு தன் வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கும், எனவே ஏதாவது செய்” என்றது.

ஆனால் அந்த எருமை சொன்னது,”என்னால் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது அது செய்யும் தவறுக்கு அதுவே ஒரு நாள் வருத்தப்படும்” என்றது. சில நாட்களுக்குப் பிறகு இந்த எருமை மாடு ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அதனுடைய சகோதரன் வருவதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தது. அந்த இரண்டு சகோதரர்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருப்பார்கள்.

அப்போது இந்த எருமை மாடு சொன்னது,” அண்ணா நீ இங்கேயே ஓய்வெடு நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு சென்றது. அப்போது இந்த குரங்கு அங்கே வந்து  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அண்ணன் எருமை மாடை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

Tamil story for kids with moral

அந்த குரங்கிற்கோ இது வேற எருமை மாடு என்று தெரியாது. அதன் மேலே ஏறி குதித்து அதன் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு நீ ஒரு முட்டாள் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தது. அப்போது அந்த எருமைக்கு மிகவும் கோபம் வந்தது. அண்ணன் எருமைகாரனோ ரொம்பவே கோவக்காரன் தம்பியை போல் சாது ஆனவன் இல்லை.

எனவே கோவத்தில் அந்த குரங்கிடம் உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை முட்டாள் என்று கூறுவாய், என்று கூறிக்கொண்டு தன் வாலை வைத்து அந்த குரங்கை அடித்து, தன் கொம்பால் முட்டியது. அந்தக் குரங்கும் வலியில் துடித்துக் கொண்டே ஓடியது. அப்போதுதான் அது தன் தவறை புரிந்து கொண்டது.

அதன் பிறகு அந்தக் குரங்கு மற்ற விலங்குகளிடம் குறும்பு செய்வதை நிறுத்தியது. அனைவரிடம் அன்பாக பழக ஆரம்பித்தது.
Leave a Comment