காளையும் தங்க நாணயமும் | Buffalo and Gold Coin | Tamil Short Stories

காளையும் தங்க நாணயமும் | Buffalo and Gold Coin | Tamil Short Stories

ஒரு ஊரில் வயதான பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த பாட்டி ஒரு சிறிய கன்றுக்குட்டியையும் வளர்த்து வந்தார். அந்த  கன்றுகுட்டியை அவர் மிகவும் பாசத்தோடும் அன்போடும் வளர்த்து வந்தார். அந்த கன்று குட்டியும் இந்த பாட்டியிடம் மிகவும் பாசமாக பழகியது. 

சிறிது நாட்கள் பின்பு அந்த கன்று குட்டி பெரிய  காளையாக வளர்ந்தது. அந்தப் பாட்டிக்கும் வயதாகி விட்டதால் அவர்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அன்றாடம் சாப்பிடவும் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். ஒரு நாள் அந்தப் பாட்டி தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று வருந்தி கொண்டிருப்பதை இந்த காளை பார்த்தது.

இந்தக் காளை தன் மனதில் எண்ணியது, “பாட்டி என்னை சிறு வயதில் இருந்து இப்போது வரை நன்றாக கவனித்து வந்தார்கள்,இப்போது  அவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது, என்னால் முடிந்த உதவியை நான் அவர்களுக்கு செய்ய வேண்டும்” என்று முடிவெடுத்தது.

அந்தக் காளை ஏதாவது வேலை வேண்டுமென்று தேடிக்கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது வழியில் ஒரு விவசாயி தன்னுடைய காய்கறிகளை எல்லாம் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அப்போது இந்த காளை அவரிடம் சொன்னது, “என்னால் இந்த காய்கறி மூட்டைகளை எல்லாம் சந்தைக்கு எடுத்து செல்ல முடியும், எனக்கு பணம் தேவை இருக்கிறது எனவே என் வேலைக்கு ஏற்ப கூலியை தாங்கள் தர வேண்டும்” என்று கேட்டது.

அந்த விவசாயியும் சரி என்று சம்மதித்தார். அந்த மூட்டைகளை எல்லாம் காளை சந்தைக்கு சுமந்து சென்றது. அந்த விவசாயியும் சந்தோஷம் அடைந்தார். அந்தக் காளைக்கு ஒரு பை நிறைய தங்க நாணயங்களை கொடுத்தார். அந்தக் காளையும் தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு சந்தோசமாக பாட்டியிடம் திரும்பி சென்றது.

இதை பார்த்த பாட்டி இந்த தங்க நாணயங்கள் எல்லாம் உனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டார். அதற்கு அந்தக் காளை நடந்தவற்றை எல்லாம் கூறியது. அந்தப் பாட்டிக்கு மிகவும் சந்தோஷம் ,அந்தக் காளை பாட்டியிடம் சொன்னது ,”சிறு வயதிலிருந்து நீங்கள் என்னை நன்றாக கவனித்து வந்தீர்கள், இப்போது உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் நிச்சயமாக உதவி செய்வேன்”. 

இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் நானே வேலை செய்து உங்களுக்கு பணம் சம்பாதித்து தருகிறேன் என்று சொன்னது. பாட்டி நெகிழ்ச்சியில் அந்த காளையை கட்டி அரவணைத்தார்.

 நீதி: நன்றி மறவாமல் இருக்க வேண்டும்
Leave a Comment