வெட்டுக்கிளியும் எறும்பும் | Grasshopper and Ant | Bedtime stories For Kids In Tamil

வெட்டுக்கிளியும் எறும்பும் | Grasshopper and Ant | Bedtime stories For Kids In Tamil

ஒரு அடர்ந்த காட்டில் வெட்டுக்கிளியும் எறும்புகளும் வசித்து வந்தன. இந்த எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கும். தங்கள் எதிர்காலத்திற்காக அவை  ஒன்றாக உணவு திரட்டி சேமித்து கொண்டு இருந்தார்கள். 

அப்போது ஒருநாள் வெட்டுக்கிளி எறும்பு களிடம் கேட்டது, “நீங்கள் ஏன் எப்போதும் இப்படி கடினமாக உழைத்து உணவு சேகரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”. அதற்கு அந்த எறும்புகளில் ஒன்று கூறியது, “இப்போது கஷ்டபட்டு உணவு சேகரித்தால் தான் குளிர்காலம் வரும் போது  பட்டினிகிடக்காமல் உணவை சாப்பிட முடியும்” என்றது.

grasshopper tamil short story

அதற்கு அந்த வெட்டுக்கிளி சிரித்துக்கொண்டே சொன்னது, “என்னைப் பாருங்கள் நான் எவ்வளவு சந்தோஷமாக ஆடி பாடி கொண்டு திரிகிறேன், எதிர்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்படக்கூடாது நிகழ்காலத்தை சந்தோஷமாக வாழவேண்டும்” என்று சொன்னது.

நான் இன்றைக்கு உணவு சாப்பிட்டு விட்டேன் இனி நான் சந்தோஷமாக ஆடி பாடி திரிய போகிறேன் என்று சிரித்துக் கொண்டே சென்றது. சிறிது நாட்கள் கடந்து சென்றன குளிர்காலமும் வந்தது.

அப்போது அந்த எறும்புகள் அனைத்தும் தாங்கள் வெயில் காலத்தில் சேர்த்து வைத்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு  இருந்தன. ஆனால் இந்த வெட்டுக்கிளிக்கு உணவே கிடைக்கவில்லை.  இந்த வெட்டிக்கிளி உணவு தேடி அங்கேயும் இங்கேயும் பசியால் அலைந்தது.

ஆனால் எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக வெட்டுக்கிளி அந்த எறும்புகள் கூட்டத்தை தேடி வந்தது. அந்த எறும்புகளிடம் கேட்டது, “எனக்கு மிகவும் பசியாக உள்ளது எனக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் வேண்டும்” என்று கேட்டது. 

அப்போது அந்த எறும்பு சொன்னது, “நீதான் வருங்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்பட மாட்டாய் என்று கூறினாயே, இப்போது தெரிகிறதா வெயில் காலத்தில் நீ சாப்பிட உணவும் தங்க இடமும் சேகரித்து வைத்திருந்தால் இப்படி கஷ்டப்பட வேண்டுமா” என்று கேட்டது.

ant Tamil short story

அப்போதுதான் வெட்டிக்கிளி தான் செய்த தவறை புரிந்து கொண்டது பின்பு அந்த எறும்பும் அந்த வெட்டிகிளிக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் அளித்தது. வெட்டுக்கிளியும் இனி வரப்போகும் நாட்களில் உணவு சேகரித்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது.

நீதி: வரும்முன் காப்பதே சிறப்பு




Leave a Comment