காய்கறி நண்பர்கள் | Vegetable friends | Short stories in Tamil

காய்கறி நண்பர்கள் | Vegetable friends | Short stories in Tamil

ஒரு ஊரில் தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், என்று  நான்கு காய்கறி நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதில் தக்காளி மிகவும் அழகாக இருக்கும். அதனுடைய  கண்ணங்கள் பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருக்கும்.

அந்தத் தக்காளி மிகவும் பலசாலியாக கூட இருந்தது. ஒருநாள் வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் ஆகிய மூன்றும் தக்காளியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தனர். இதை இரண்டு எலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

அந்த எலிகள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டன, “நாம் எப்படியாவது இந்த தக்காளியை ருசி பார்த்தாக வேண்டும்”. எனவே அந்த இரண்டு எலிகளும் இரவு தக்காளி தூங்கும் போது அதை கடத்தி செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.

rats and vegetables short story tamil

இரவு தக்காளி அதனுடைய வீட்டில் உள்ள கட்டிலில் நன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்த இரண்டு எலிகளும் மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்து அந்த தக்காளி கட்டிலில் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர்.

உடனே அந்த இரு எலிகளும் தக்காளியை படுத்திருந்த கட்டிலோடு தூக்கி செல்லலாம் என்று முடிவெடுத்தனர். பின்னர் மெதுவாக கட்டிலை தூக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த கட்டில் மிகவும் கனமாக இருந்தது.

இருந்தாலும் அந்த இரண்டு எலிகளும் ரொம்ப கஷ்டப்பட்டு தக்காளியை கட்டிலோடு தூக்கி கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர். பின்பு அந்த தக்காளியை சங்கிலியால் கட்டி விட்டு அந்த எலிகள் இரண்டும் வெளியே சென்றது.

சிறிது நேரத்திற்கு பிறகு தக்காளி கண் விழித்து பார்த்த போது  தான் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது. உடனே பலசாலியான அந்த தக்காளி தன்னுடைய பலத்தை பயன்படுத்தி அந்த சங்கிலியை உடைத்தது.

அதன் பின்னர் தக்காளி அங்கிருந்து தப்பித்து தன் நண்பர்களிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறியது. நண்பர்கள் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு,வெண்டைக்காய் மற்றும் தக்காளி நான்கு பேரும் சேர்ந்து அந்த  இரண்டு எலிகளை தேடி அவர்களை பிடித்து நன்றாக பந்தாடினர்.

அதன் பிறகு அந்த எலிகள் இரண்டு பேரும் அவர்களிடமிருந்து அடி வாங்கிக்கொண்டு வலியால் அழுதுகொண்டே தங்களுடைய இடத்தை தேடி ஓடினர். அப்போதுதான் அந்த எலிகளுக்கு அந்த நான்கு நண்பர்களின் ஒற்றுமையை பற்றி புரிந்தது.
Leave a Comment