சக்கர  தாங்கி | Wheel Bearing | Tamil Short Stories for Kids

சக்கர  தாங்கி | Wheel Bearing | Tamil Short Stories for Kids

ஒருநாள் நான்கு சீடர்கள் காட்டு வழியாக ஒன்றாக பயணம் செய்து கொண்டு சென்றார்கள். அவர்கள் தூரத்தில் ஒரு ஆஸ்ரமத்தை கண்டார்கள். அந்த ஆசிரமத்தில் தான் சுவாமி பைரவா நந்தா இருந்தார்.

அவர்கள் நான்கு பேரும் அந்த ஆசிரமத்திற்கு சென்றார்கள். சுவாமி பைரவா நந்தா அந்த நான்கு சீடர்களிடம் கேட்டார், “நீங்கள் யார் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?”. அதற்கு அந்த சீடர்கள் சொன்னார்கள், “சுவாமி, உங்களுடைய அதிசய சக்தி பற்றி நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். உங்களை பார்த்த நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறோம்”.

“நாங்கள், உங்களுடைய சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை” என்றனர். அதைக்கேட்ட சுவாமி பைரவா நந்தா அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று நான்கு மண் வாரி எடுத்துக் கொண்டு வந்தார்.

அந்த நான்கு மண்  வாரியை சீடர்களுக்குக் கொடுத்து சொன்னார், “கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது, அந்த குளத்தின் கரையில் ஒரு பெரிய மரம் உள்ளது அந்த மரத்தின்  அருகே உள்ள செம்மண்ணை இந்த மண்வாரி வைத்து தோண்டுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று பார்க்கலாம் என்றார்.

அந்த நான்கு சீடர்களும் மண் வாரியை எடுத்துக்கொண்டு குளத்திற்கு அருகில் உள்ள செம்மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சீடர் அங்கே  தோண்டிய இடத்தில்செம்பு இருப்பதை பார்த்து ஆச்சரியம் உற்றார். அவர் மற்ற சீடர்களிடம் சொன்னார் “நமக்கு நிறைய செம்பு கிடைத்துள்ளது. நாம் இதை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம்” என்றார். ஆனால்,  மற்றொரு சீடர் சொன்னார், “நாம் இங்கே தங்கத்தை தேடி தான் வந்துள்ளோம். அதனால் நீ வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொண்டு செல் “.

அந்த செம்பை கண்டுபிடித்த முதல் நபர் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். மற்ற மூன்று பேரும் திரும்ப தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது மற்றொரு சீடருக்கு வெள்ளி கிடைத்தது. அவர் சந்தோஷத்தில், “ஐயோ கடவுளே! நான் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவன் எனக்கு  வெள்ளி கிடைத்துள்ளது, என்று சொல்லிக்கொண்டு மற்ற இரண்டு பேரிடம் நாம் இந்த வெள்ளியை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம் வாங்க” என்றார்.

ஆனால் மற்ற இருவரும் தங்கம் கிடைக்கும் வரை  தோண்டி பார்க்கலாம், நீ வேண்டும்  என்றால் அந்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு செல் என்றனர். அந்த இரண்டாவது சீடரும் கிடைத்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றார். மற்ற இரண்டு சீடர்களும் மீண்டும் மண் வாரி எடுத்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

அப்போது மூன்றாவது சீடர் அங்கே தங்கம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவர் மற்ற சீடரிடம் நாம் இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லலாம் என்றார். ஆனால் அவரோ, “இல்லை இங்கே  செம்பு, வெள்ளி, மற்றும் தங்கம் கிடைத்துள்ளது, எனவே இன்னும் தோண்டினால் வைரம் கிடைக்கும்” என்று சொன்னார்.

தங்கம் கிடைத்த சீடர் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். அந்த நான்காவது சீடர் மண்வாரி எடுத்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது ஒரு பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு அந்த ஓட்டைக்குள் அவர் கீழே போய் விழுந்தார். அந்த நான்காவது சீடர் எழும்பி பார்த்தபோது அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது. அதை பார்த்த இந்த சீடர் கேட்டார், “நீங்கள் யார்? அந்த சக்கரம் ஏன் உங்கள் தலையில் சுற்றிக்கொண்டு உள்ளது?” என்றார்.

greedyperson-moralstory tamil

அப்படி கேட்டவுடனே அந்த சக்கரம் இந்த சீடர் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. உடனே அந்த சீடர் அதிர்ச்சி  அடைந்தார். அவர் அந்த மனிதனிடம் இது என்னது ஏன் என் தலையில் வந்து சுற்றி  கொண்டிருக்கிறது இதை எடுங்கள் என்றார். அதற்கு அந்த மனிதர் சொன்னார், “என்னால் அதை செய்ய முடியாது, பேராசை பிடித்த அனைவரும் கடைசியில் இங்கே தான் வருவார்கள். நானும் இதே இடத்தில் தோண்ட ஆரம்பித்தேன் முதலில்  செம்பு கிடைத்தது மீண்டும் வெள்ளி பின்பு தங்கம்  கிடைத்தது.

இருந்தும் பேராசையால், வைரத்திற்கு ஆசைப்பட்டு தோண்ட ஆரம்பித்தேன். இந்த குழியில் வந்து விழுந்தேன். அந்த சக்கரம் என் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. இனி ஏதாவது ஒரு பேராசை பிடித்தவன் வந்து  இங்கே விழும்போது போது அந்த சக்கரம் உன்னை விட்டு அகன்று விடும்”, என்று கூறிக்கொண்டு அந்த சீடர் வந்த ஓட்டை வழியாக  இந்த மனிதன் மேலே சென்றார்.

நீதி: 

பேராசை பெரும் நஷ்டம்.




Leave a Comment