புத்திசாலி ஆடு | Clever Goat | Moral Stories In Tamil

புத்திசாலி ஆடு | Clever Goat | Moral Stories in Tamil

ஒரு கிராமத்தில் லெண்ணி என்னும் அழகிய குட்டி ஆடு ஒன்று இருந்தது. அதற்கு புதிதாக இரு கொம்புகள் முளைத்து வந்திருந்தது. அது தன் கொம்புகளை நினைத்து மிகவும் பெருமை பட்டுக் கொண்டு இருந்தது.

எல்லோரிடமும் சென்று, “இங்கே பார் எனக்கு மிகவும் அழகான இரு கொம்புகள் முளைத்து வருகிறது” என்று காட்டிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் விவசாயி தன் ஆடுகள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றார்.

எல்லா ஆடுகளும் அங்கே புல் மேய்ந்து கொண்டு இருந்தன. ஆனால் லெண்ணி மட்டும் அங்கு இருந்த அணில், முயல் ஆகியவற்றுக்கு தன் கொம்புகளை காட்டிக்கொண்டே இருந்தான்.

Moral Stories in Tamil fox

இந்தக் காட்சியை அங்கே புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருந்த நரி ஒன்று பார்த்தது. அந்த நரி சொன்னது, “இவன் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறான், இவனை இன்றைக்கு நான் ருசி பார்க்க வேண்டியதுதான்” என்றது.

எப்படியாவது அந்த லெண்ணியை பிடித்து சாப்பிட வேண்டும் என்று அந்த நரி திட்டமிட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் விவசாயி தன் ஆடுகளை எல்லாம் தன் வீட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றார்.

எல்லா ஆடுகளும் அவர் பின்னே சென்றனர். ஆனால் லெண்ணி மட்டும் தன் கொம்பை மற்ற விலங்குகளிடம் காட்டுவதில் ஆர்வமாக சுற்றித் திரிந்தான்.. லெண்ணி திரும்ப வந்து பார்த்தபோது விவசாயி எல்லா ஆடுகளையும் அழைத்து சென்றிருந்தார்.

அந்த நரி லெண்ணி தனியாக நிற்பதைப் பார்த்து அவன் முன் வந்து சொன்னது, “உன் கொம்புகள் பார்க்க மிகவும் அழகாக உள்ளது, நீ என்னுடன் வந்தால் உன் அழகிய கொம்பினை நான் மற்ற விலங்குகளுக்கு காட்டிக் கொடுப்பேன்” என்றது.

Moral Stories in Tamil farmer

லெண்ணிக்கு நரியின் தந்திரம் புரிந்தது. எனவே லெண்ணி நரியிடம் சொன்னது, “உன் தந்திரம் எனக்கு நன்றாகவே தெரியும் நீ என்னை கொன்று ருசி பார்க்கவே அழைக்கிறாய். நான் உன்னுடன் நிச்சயம் வருகிறேன், ஆனால் அதற்கு முன்பு நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் இசை வாசிக்க வேண்டும்” என்றது.

நரியும் இசை வாசிக்க ஆரம்பித்தது. நரி லெண்ணியிடம், “நீ ஏதாவது ஒரு பாட்டு பாடு நானும் இசை வாசிக்கிறேன்” என்றது. நரி இசை வாசிக்க ஆரம்பித்தது லெண்ணி சத்தமாக, “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று தன் முதலாளி மற்றும் மற்ற ஆடுகளுக்கு தான் ஆபத்தில் மாட்டி இருப்பதாக செய்தியை தெரிவித்தது.

லெண்ணியின் சப்தத்தைக் கேட்ட விவசாயி உடனே ஓடி வந்து பார்த்தார். விவசாயியை பார்த்த நரி, “இனிமேல் இங்கேயே இருந்தால் இந்த விவசாயி நம்மை அடித்து விடுவார்” என்று பயத்தில் ஓடியது.

அப்போதுதான் லெண்ணி ஒரு பாடம் படித்தான். இனிமேல் எப்போதும் தனியாக எங்கேயும் செல்லக்கூடாது, தன் முதலாளி பேச்சைக் கேட்டு அவர் பின்னே செல்ல வேண்டும். மற்ற ஆடுகளுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
Leave a Comment