யாரையும் எளிதாக நம்ப வேண்டாம் | Don’t trust anyone blindly | Tamil Short Stories For Kids

யாரையும் எளிதாக நம்ப வேண்டாம் – Don’t trust anyone blindly | tamil short stories for kids

மார்ட்டின் என்கிற ஒரு மனிதர் ஊர் ஊராக சென்று இசை வாசிப்பவர். அவர் ஒவ்வொரு ஊராக சென்று  தன் இசை திறமையை மக்களுக்கு காட்டுவார். அவர்களும் இவருக்கு காசு கொடுப்பார்.

மார்ட்டின் எப்போதும் அந்த பணத்தை எல்லாம் தன்னுடைய பையில் போட்டு வைத்திருப்பார். அந்தப் பையை எப்போதும் அவர் தோளில் தான் இருக்கும். ஒருநாள் மார்ட்டின் தன் பையில் காசு போடு வதை திருடன் ஒருவன் பார்த்தான். எப்படியாவது அந்த பையை திருட வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தான்.

ஒரு நாள் அந்தத் திருடன் மார்ட்டினிடம் சென்று “ஹலோ மார்ட்டின் நான் உங்களோட இசைக்கு அடிமை. உங்களுக்காக  வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்றான்.

Tamil Short Stories For Kids

அதற்கு அந்த மார்ட்டின் சொன்னார், “இல்லை உன்னை வேலைக்கு வைத்து உனக்கு சம்பளம் கொடுக்க என்னிடம் காசு இல்லை” என்றார். அதற்கு அந்த திருடன் “இல்லை எனக்கு காசு எதுவும் வேண்டாம் நான் உங்களுக்கு வேலை செய்ய ஆசைப்படுகிறேன்” என்றான். 

அதற்கு மார்ட்டின் சம்மதித்தார். அவர் அந்த திருடனிடம் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வரச் சொல்வார். ஆனால் எப்போதும் தன் பணப்பையை தன்னிடமே வைத்திருந்தார். அந்தத் திருடன் பணப்பையை திருட மிகவும் முயற்சி செய்தான் ஆனால் அவனால் அது முடியவில்லை.

ஒருநாள் இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மகாராஜா வருவதை மார்டின் பார்த்து, அந்த திருடனிடம், “நான் மகாராஜாவுக்கு ஒரு இசை வாசிக்கப் போகிறேன் என்னுடைய இசையைக் கேட்டு அவர் எனக்கு நிறைய காசு கொடுப்பார்” என்றார்.

அந்தத் திருடன் மார்ட்டினிடம் சொன்னான், “ஆமாம் உங்களுடைய இசையை கேட்டால் மகாராஜா நிறையவே காசு கொடுப்பார். அதற்கு நீங்கள் ஏழை போல சென்று இசை வாசிக்கவேண்டும். உங்களிடம் இருக்கும் பையை என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள். உங்களிடம் அந்த பை இருப்பதை பார்த்தால் மகாராஜா அதில் நிறைய காசு இருக்கும் என்று நினைத்து விடுவார்” என்றான்.

king with music man

மார்ட்டினும் அந்தத் திருடன் பேச்சை நம்பி பையை அவனிடம் கொடுத்துவிட்டு மகாராஜா முன்பு சென்று மகாராஜா, “நான் உங்களுக்கு ஒரு அழகான இசையை வாசிக்கப் போகிறேன்” என்று தன் இசையை வாசிக்க ஆரம்பித்தார். 

அதை முடித்த பிறகு மகாராஜா சொன்னார், “உன் இசை கேட்க மிகவும் நன்றாக உள்ளது இப்போது எனக்கு நிறைய வேலைகள் உள்ளது” என்று கூறினார். மகாராஜா தனக்கு எந்த காசும் கொடுக்காததை எண்ணி ஏமாற்றத்துடன் திரும்பிய மார்ட்டினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த திருடன் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு  தன்னை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடுவதைப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. அவரால் அவனை பிடிக்க முடியவில்லை. 

அவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த காசை இழந்ததை நினைத்து மிகவும் வருத்தமுற்றார். அப்போதுதான் அவர் முடிவெடுத்தார் இனிமேல் முன் பின் தெரியாத யாரையும் நம்பவே கூடாது என்று.2 thoughts on “யாரையும் எளிதாக நம்ப வேண்டாம் | Don’t trust anyone blindly | Tamil Short Stories For Kids”

Leave a Comment