சொல் பேச்சு கேட்காத கழுதை | Bedtime Stories For Kids In Tamil

சொல் பேச்சு கேட்காத கழுதை | Bedtime Stories For Kids In Tamil

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பென்னி என்கிற கழுதை ஒன்று இருந்தது. 

அந்தப் பென்னி ஒருபோதும் விவசாயி பேச்சை கேட்காது. அவர் அதனுடைய நல்லதுக்கு என்று சொன்னாலும் அது அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது.

ஒரு நாள் விவசாயி தன் வேலை விஷயமாக மலை உச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் தன்னுடன் பென்னியை அழைத்துக்கொண்டு சென்றார். மேலே மலை உச்சிக்கு சென்ற பிறகு பென்னி விவசாயிடம் சொன்னது, “நான் இங்கு ஏறி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஆனால் கீழே செல்வது மிகவும் எளிதாகத் தான் இருக்கும்,” என்று சொன்னது. 

Bedtime Stories For Kids In Tamil

அவர்கள் இருவரும் தங்கள் வேலையை முடித்துவிட்டு கீழே திரும்பி செல்லும்போது அவர்கள் பாதை மிகவும் பள்ளமாக இருந்தது. அப்போது அந்த விவசாயி சொன்னார்,”இங்கு இருந்து செல்லாமல் வேறு ஏதாவது வழியாக செல்லலாம்” என்று. ஆனால் பென்னி அவர் பேச்சைக் கேட்காமல் “இந்த பாதை பார்க்க தான் பள்ளமாக இருக்கிறது, ஆனால் இந்த வழியாக செல்ல எளிதாகத்தான் இருக்கும்” என்றது. 

ஆனால் விவசாயி சொன்னார், “இல்லை நான் இந்த வழியாக வரப்போவதில்லை நிச்சயமாக கீழே நிலை தடுமாறி விழ நேரிடும், எனவே வேறு வழியாக செல்லலாம்” என்றார். 

அவர் பேச்சை கேட்காமல் அது சொன்னது, “இங்கு  பச்சைப்பசேலாக இருக்கிறது, எனவே நான் இங்கிருந்து கீழே குதிக்க போகிறேன்” என்றது.  விவசாயி சொன்னார், “நான் வேறு வழியாக செல்கிறேன், நீ உன் விருப்பப்படி செய்” என்றார். 

farmer Bedtime Stories For Kids In Tamil

விவசாயி வேறு வழியாக பயணிக்க ஆரம்பித்தார். அந்த பென்னி மேல் இருந்து கீழே குதித்தது. கீழே ஒரு வைக்கோல் கூட்டம் இருந்தது, நல்லவேளையாக அதில் விழுந்ததால் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனால் உடல் முழுவதும் பலமாக அடிபட்டது. 

அப்போதுதான் அது உணர்ந்தது, “முதலாளி எது செய்தாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும். நான் தான் ஒருபோதும் அவர் பேச்சைக் கேட்காமல் நடந்துகொண்டேன்”.

இப்போதும் அவர் பேச்சைக் கேட்காமல் குதித்து எனக்கு இந்த நிலைமை ஆகிவிட்டது. எனவே இனியாவது அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அன்று முதல் விவசாயி என்ன சொன்னாலும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி நடந்து கொண்டது.

நீதி:

ஒருவர் நம் நன்மைக்கு சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.Leave a Comment