தன்னம்பிக்கை உள்ள தவளை | தமிழ் கதைகள் | Self Confidence Of The Frog | Tamil Stories For Reading

தன்னம்பிக்கை உள்ள தவளை | தமிழ் கதைகள் | Self Confidence Of The Frog | Tamil Stories For Reading

ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, “நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது.

அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின் சமயல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.

திடீரென்று நிலைதடுமாறி  நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது.

இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்ற தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு இருந்ததால் கடைந்த மோரில் வருவது போல பாலில் இருந்து மேலே வெண்ணெய் வந்தது. அதிசயப்பட்ட தவளை மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.

அதனால் கடினமான வெண்ணை மேலே வந்தது. தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து பாதுகாப்பான இடம் தேடியது.

நீதி : முயற்சி திருவினையாக்கும்.Leave a Comment