இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு | தமிழ் கதைகள் | Every Creation Of Nature Has Meaning | Tamil Siru Kathaigal

இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு | தமிழ் கதைகள் | Every Creation Of Nature Has Meaning | Tamil Siru Kathaigal

ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு எடுக்கனும் போல் இருந்தது. சுத்தி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்துச்சு அந்த இடம். ஆனா அவருக்கு ஓய்வு ரொம்பவே அவசியமாக இருந்துச்சு, ரொம்பவே களைத்து போயிட்டாரு.

ரொம்ப தூரம் நடந்ததற்கு அப்புறம் அவரு ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ள நுழைந்தார். அங்க நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும் ஆக இருந்தது. அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு அவருக்கு  கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.

அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்துல ஒரு பூசணி கொடிய பார்த்தாரு. அதுல மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் யோசித்தார், “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சின்னதா இருக்கு ஆனா காயோ ரொம்ப பெருசா இருக்கு. ஆரஞ்சு பழமோ சின்னதா இருக்கு ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது”.  இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடா இருக்கு. இந்த இயற்கையைப் படைத்தவங்களுக்கு கண்டிப்பா ஒன்றுமே தெரியாம தான் இருந்திருக்கும்.

அப்படி சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செஞ்சுட்டு இருந்தார். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ரொம்பவே தூக்கம் வருவது மாதிரி இருந்துச்சு அதனால ஒரு மரத்துக்கு அடியில் தலைசாய்த்து  தூங்கிட்டாரு, குரட்டை சத்தமும் வந்தது.

திடீரென்று  அந்த பயணி தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில்  கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று. 

அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த  ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்” என்று நினைத்தார். அவருக்கு அப்போது புரிந்தது பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரையில்தான் எனவே ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்று அவர் உணர்ந்தார்.1 thought on “இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு | தமிழ் கதைகள் | Every Creation Of Nature Has Meaning | Tamil Siru Kathaigal”

Leave a Comment