சிங்கமும் நரி குட்டியும் | தமிழ் கதைகள் | Lion And Fox Cub | Bedtime Stories In Tamil

சிங்கமும் நரி குட்டியும் | தமிழ் கதைகள் | Lion And Fox Cub | Bedtime Stories In Tamil

ஒரு காட்டில் ஒரு சிங்கம் தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்துச்சு. அதுக்கு ஒரு மனைவியும் இரண்டு குட்டி சிங்கங்களும் இருந்துச்சு. அந்தக் குடும்பம் எந்த கவலையும் இல்லாம அங்கு வாழ்ந்து வந்தது.

ஒருநாள் அந்த ஆண் சிங்கம் உணவு தேடி வெளியே போச்சு. அந்த சிங்கம் மோப்பம் பிடிச்சிட்டு போயிட்டு இருந்துச்சு, அப்போ அங்க ஒரு நரிக்குட்டி இருந்துச்சு. அந்த நரிக்குட்டி ரொம்பவே பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது.

அதோட கண்கள் மூடியிருந்தது. சிங்கம் அந்த நரி குட்டியை தன் வாயில் கவ்வி தன் வீட்டுக்கு கொண்டு போச்சு. பெண் சிங்கம் அந்த நரி குட்டியை பார்த்து, “இப்போ நமக்கு மூணு குழந்தைங்க, இவங்க மூணு பேரையும் நம்ம ஒன்னாதான் வளர்க போகிறோம்” அப்படி சொல்லுச்சு.

ஒரு நாள் அப்பா சிங்கமும் அம்மா சிங்கமும் வெளியே உணவு தேடி போய் இருந்தாங்க. அப்போ இந்த மூன்று குட்டிகளும் விளையாடிட்டு குகைக்கு வெளியே வந்தாங்க. அப்போ ஒரு பெரிய யானை அந்த வழியா வந்துச்சு. அந்த யானையை பார்த்ததும் இரண்டு சிங்க குட்டிகளும் ஆக்ரோஷமா உறுமிக்கிட்டு அந்த யானையை துரத்த ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனால் அந்த நரி குட்டியோ பயத்துல ஓடிப்போய் குகைக்குள்ளே ஒளிஞ்சிகிட்டது. அந்த யானை போனதுக்கப்புறம், குகைக்குள்ளே இருந்த குட்டி நரி அவமானத்தோடு தலைகவிழ்ந்து வெளியே வந்துச்சு.

அன்றிரவு அந்த இரண்டு சிங்க குட்டிகளும் தங்களோட அம்மாகிட்ட, “அம்மா இன்னைக்கு ஒரு யானை வந்துச்சு, நாங்க ரெண்டு பேரும் அந்த யானையை துரத்தியடிச்சோம். ஆனால் நரிகுட்டி பயந்து குகைக்குள் ஒளிஞ்சிட்டு இருந்து” அப்படின்னு சொன்னாங்க. அதை கேட்டதும் நரிகுட்டி  அவமானத்தில் ரொம்பவே அழ ஆரம்பிச்சது.

அந்த நரிக்குட்டி சொல்லிச்சு, “என்னோட பழக்கவழக்கங்கள் உங்கள விட ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு, என்னால உங்கள போல நடந்துக்க முடியாது அதனால நான் என் குடும்பத்தோட இருக்கறதுதான் நல்லது” அப்படின்னு சொல்லிச்சு. அதுக்கு அந்த ஆண்சிங்கம் சொல்லிச்சு, “சரி கவலைப்படாதே உன்னை உன் குடும்பத்தோட  நாங்க சேர்த்து வைக்கிறோம்” என்றது.

மறுநாள் அந்த சிங்கங்களும் நரி குட்டியும் அந்த நரியின் குடும்பத்தை தேடி காட்டுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் அந்த நரி குட்டியோட குடும்பத்தை பார்த்தாங்க. அந்த சிங்கங்கள், நரி குட்டியை அதோட குடும்பத்துடன் சேர்த்து வச்சாங்க.

நீதி :நம்மை போல குணம் உள்ள நண்பர்களிடம் நட்பு வைப்பதே நல்லது.Leave a Comment