இரட்டைத்தலை கொக்கு | தமிழ் கதைகள் | Double-Headed Crane | Bedtime Stories In Tamil
ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ரெட்டை தலை கொக்கு ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் இந்த கொக்க ரொம்பவே வித்தியாசமா பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க. இந்த கொக்கு பார்க்க ரொம்பவே அழகா இருந்துச்சு.
அந்த ரெண்டு தலைல ஒருத்தலை எப்பவுமே அகங்காரம் பிடிச்சதா இருக்கும். ஆனா இன்னொரு தலை எல்லாத்துக்குமே அடங்கி போயிட்டு இருந்துச்சு. அந்த அகங்காரம் பிடித்த தலை, இன்னொரு தலையை எப்பவுமே அதிகாரம் பண்ணிட்டு இருந்துச்சு.

ஒரு நாள் இவங்க ரொம்ப தூரம் பறந்துகிட்டு இருந்தாங்க. ரொம்பவே களைப்பாக இருந்ததால் அவங்க ரெண்டு பேரும் ஒரு குளத்துல தண்ணி குடிக்க போனாங்க.
அந்த அகங்காரம் பிடிச்ச தலை ஆவேசமாக தண்ணியை குடிச்சுட்டு இருந்து. அப்போ இன்னொரு தலை பக்கத்துல இருந்த செடி ஒன்ற பார்த்துச்சு, அதுல அழகான பழம் ஒன்று இருந்தது. அதை பார்த்ததும் இந்த கொக்கு அந்த பழத்தை சாப்பிடுறதுக்கு நினைச்சது.

இந்த இரண்டு தலையும் மாறிமாறி அந்தப் பழத்துக்காக சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அப்போ அந்த அகங்காரம் பிடித்த தல சொல்லிச்சு, “சரி நீயே அந்த பழத்தை சாப்பிட்டுகோ”. அவங்க அந்த செடிக்கு பக்கத்துல போனபோது அந்த அகங்காரம் புடிச்ச தல சொல்லிச்சு, “இந்த பழம் பாக்குறதுக்கு விஷம் உள்ள பழம் போல இருக்குது”.
அப்போ இன்னொரு தலை சொல்லுச்சு, “இல்லை நீ அந்த பழத்தை நான் சாப்பிடாம இருக்கறதுக்காக தான் நீ பொய் சொல்லுற அந்த பழத்தை நான் சாப்பிட போறேன்” என்றது.

அந்த அகங்காரம் பிடித்த தலை சொல்லுச்சு, “இல்ல நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வயறு தான் நீ அந்த பழத்தை சாப்பிட்டா நானும் தான் உன் கூட சேர்ந்து செத்துப் போயிருவேன் அதனால அந்த பழத்தை சாப்பிட வேணாம்னு”. என்று எவ்வளவு சொல்லியும் இன்னொரு தலை அதோட பேச்சைக் கேட்கவே இல்லை.
அது அந்தப் பழத்தை எடுத்து உடனே சாப்பிட்டது. அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் இரண்டுபேரும் மயக்கம் போட்டு கீழே விழுந்து செத்துப் போயிட்டாங்க.
நீதி : எப்போதும் ஒரு செயலை செய்யும் முன் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.