பூனையின் புதையல் வேட்டை | தமிழ் கதைகள் | Cat’s Treasure Hunt | Tamil Siru Kathaigal

பூனையின் புதையல் வேட்டை | தமிழ் கதைகள் | Cat’s Treasure Hunt | Tamil Siru Kathaigal

முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.

எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.

புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம்  பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.

அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன் உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.

அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.

உதவிக்காக அந்தப்  பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது. ஆனால் எலிகள்  உதவி செய்ய மறுத்தன. உடனே அந்தப் பூனை கோபத்தில், “நான் மட்டும் இப்போது மேலே வந்தால் உங்கள் யாரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டியது”. அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.

எலிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூனை இருந்த அந்த குழியில் மண்ணை போட்டு நிரப்பினர். பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.Leave a Comment

%d bloggers like this: