மிகப்பெரிய தியாகம் | Biggest Sacrifice | Tamil Bedtime Story
ஒரு தூரத்து தேசத்தில் மகாராஜா ஒருத்தர் வாழ்ந்து வந்தார். அவர் ஏழை மக்களுக்கு எப்பவுமே உதவி செய்துகொண்டே இருப்பார். அவர் ரொம்பவே இரக்க குணம் உள்ளவர். தானம், தர்மம் பண்ணுவதில் ரொம்பவே பெரிய மனசுக்காரர்.
அவருடைய ராஜ்யத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகளுக்கும் திருமண வயது எட்டியது. ஆனால், அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு விவசாயிடம் பணம் இல்லை.
அப்போ அவர் தன்னுடைய மகளிடம் சொன்னார், “நான் மகாராஜாவிடம் சென்று அவரிடம் உன் திருமணத்திற்கு உதவி கேட்கப் போகிறேன்” என்றார். அடுத்தநாள் மகாராஜாவை சந்திப்பதற்காக அந்த ஏழை விவசாயி கிளம்பினார்.

மகாராஜாவை சந்திக்க செல்லும் வழியில் அவர் மிகவும் களைப்படைந்தார். மிகவும் பசியாக இருந்தது எனவே ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். அங்கே அவர் பையில் வைத்திருந்த சப்பாத்தியை எடுத்து சாப்பிட உட்கார்ந்திருந்தபோது ஒரு நாய்க்குட்டி மிகவும் பசியாக இருந்தது அது இவர் முன்வந்து வாலாட்டி கொண்டே இருந்தது.
இரக்க குணமுடைய அவர் அந்த சப்பாத்தியை அந்த நாய்க்குட்டிக்கு சாப்பிட கொடுத்து விட்டார். மீண்டும் தன் பயணத்தை தொடங்கினார். மகாராஜாவின் அரண்மனையை எட்டினார். அவர் மகாராஜாவிடம் சென்று, “வணக்கம் மகாராஜா நான் மிகவும் ஏழை விவசாயி என்னுடைய மகளின் திருமணத்துக்காக என்னிடம் எந்த பணமும் இல்லை எனவே எனக்கு தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.
உடனே மகாராஜா “சரி நான் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால், நீ உன் வாழ்நாளில் மற்றவர்க்கு செய்த உதவிகளை பற்றி என்னிடம் கூறு” என்று கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார், “நானோ ஏழை விவசாயி நான் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்”. அப்போது திடீரென்று அவர் ஒரு நாய்க்குட்டி உணவளித்து ஞாபகம் வந்தது. மகாராஜாவிடம் “நான் வரும் வழியில் ஒரு நாய்க்குட்டி பசியாக இருந்தது, நான் வைத்திருந்த உணவை அதற்கு கொடுத்தேன்” என்று கூறினார்.
மகாராஜா அந்த விவசாயின் செயலைப் பாராட்டி, “மிகவும் நல்லது, நீ பசியாக இருந்தபோதும் அந்த நாய்க்குட்டிக்கு உணவளித்துள்ளாய். இது மிகவும் பெரிய செயல்” என்று கூறி அந்த விவசாயின் மகளின் திருமணத்தை அவரே நடத்தி வைத்தார்.
நீதி : நன்மை செய்பவர்களுக்கு கண்டிப்பாக நன்மையே நடக்கும்.