பல் தேவதை | தமிழ் கதைகள் | Tooth Angel | Fairy Tales In Tamil

பல் தேவதை | தமிழ் கதைகள் | Tooth Angel | Fairy Tales In Tamil

முன்னொரு காலத்துல சீதா என்ற ஒரு பொண்ணு இருந்தா. அவ ரொம்பவே நல்ல பொண்ணு, ஆனா அவகிட்ட இருக்க பொருட்கள் போதும் என்று நினைக்காமல் எப்பவுமே ஆசைப்பட்டிட்டு இருப்பா.

அவள் ஒரு நாள் பள்ளிக்கூடம் போகும்போது அவளுடைய நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கூட்டமா பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தாள். அவ அவங்க கிட்ட போய், “நீங்க எல்லாரும் எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க” அப்படின்னு கேட்டாள்.

அவளோட நண்பர்கள் சொன்னாங்க, “நாங்க இப்போ தான் பல்தேவதை  பற்றி கேள்விப்பட்டோம், அவங்க நம்ம பல் உடைந்து போனால், ராத்திரி நம்ம தூங்கின அப்புறம் நம்ம தலைகாணி கீழே காசு வச்சுட்டு  போவாங்கலாம்” என்றனர்.

 அதற்கு சீதா சொன்னா “அடேங்கப்பா இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே, அப்போ அவங்க கொடுக்கிற காசை வச்சு நம்ம நமக்கு புடிச்சு பொருட்கள் நிறைய வாங்கிக்கலாம்” என்று பேசிட்டு அவங்களோட வகுப்பறைக்கு அவங்க போனாங்க.

சீதா பல்தேவதைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து, அவளோட பல் விழுற நாளுக்காக காத்திருந்தாள். அவளோட அப்பா அம்மா கிட்ட போய், “எப்போது என்னோட பல் விழும்” அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தாள். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவ எதிர் பார்த்தது மாதிரியே அவளோட பல் விழுந்துச்சு.

அவ அன்னைக்கு ராத்திரி அந்தப் பல்ல தன்னோட தலகாணி அடியில் வைத்து படுத்து தூங்கிட்டா. அப்போ பல் தேவதை வந்து அவளோட தலகாணி அடியிலிருந்த பல்லை எடுத்திட்டு, அதுல ஒரு காயினை வச்சாங்க. அப்போது திடீரென்று சீதா கண் முழிச்சு பாத்தா, பல் தேவதை தன்னோட பக்கத்துல நிற்பதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாள்.

அவ தலகாணி எடுத்து பார்த்தபோது அதில் ஒரே ஒரு காயின் இருந்திச்சு, அதை பார்த்த சீதா ரொம்பவே கோவப்பட்டாள். “என்னது ஒரே ஒரு காயின் தானா? எனக்கு இந்த காயின் எதுவும் தேவையில்லை, கொடுத்தா எனக்கு நிறைய காயின் கொடுங்க” என்று சொல்லிட்டு அந்த காயினை தேவதை மூஞ்சில வீசிட்டாள். ரொம்பவே வருத்தப்பட்ட தேவதை அந்த காயினை எடுத்திட்டு சோகமா கிளம்பிட்டாங்க.

கொஞ்ச நாளைக்கு அப்புறம், சீதாவின் நண்பர்கள் தேவதை அவர்களுக்கு கொடுத்த காயினை வைத்து நிறைய பொருட்கள் வாங்குவதை பார்த்து ரொம்பவே கோவப்பட்டாள். அதுக்கு அவளோட நண்பர்கள் சீதா கிட்ட சொன்னாங்க, “சீதா நம்ம எப்பவுமே பொறுமையாக தான் இருக்க வேண்டும். எதற்கும் பேராசைப் படக் கூடாது” இதையெல்லாம் கேட்டு சீதா ரொம்ப கோவமா இருந்தா.

அவளோட நண்பர்கள் நிறைய பொருட்கள் வாங்கி வைத்து விளையாடுவதை பார்த்த சீதா, ரொம்பவே வருத்தப்பட்டாள். அவ பல் தேவதைக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி அதை அவளோட நண்பர்கள் கிட்ட கொடுத்து, அவங்களோட தலகாணி அடியில் வைக்க சொன்னாள். அப்புறம் ஒருநாள் பல் தேவதை அந்தக் கடிதத்தை எடுத்து படித்துவிட்டு சீதாவை தேடி அவளோட வீட்டுக்கு வந்தாங்க. 

அப்போ சீதா அந்த பல் தேவதை கிட்ட தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு, “உங்களோட இந்த பெரிய குணத்துக்காக நான் ரொம்பவே சந்தோஷப்படுறேன். நான் தவறு செய்த பிறகும் என்ன மன்னித்து என்ன பார்க்க வந்ததுக்காக ரொம்ப நன்றி. இனிமே நான் எப்பவுமே யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று  சொன்னாள், சீதா.



Leave a Comment