யானை ராஜாவும் சுண்டெலிகளும் | யானை கதைகள் | Elephant King and Mice | Elephant Story In Tamil

யானை ராஜாவும் சுண்டெலிகளும் | யானை கதைகள் | Elephant King and Mice | Elephant Story In Tamil

வெயில் காலம் வந்ததுனால காட்டுல இருந்த நதி சுத்தமா வற்றி போச்சு. காட்டுல நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தது. அதுல ஒரு பெரிய யானை கூட்டம் இருந்துச்சு, அந்தக் கூட்டத்தை யானை ராஜா தான் பத்திரமா பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போது தண்ணி இல்லாம மற்ற விலங்குகள் இறந்துபோகிறத பார்த்து தன் கூட்டத்தோட வாழ்க்கையை நினைத்து பயந்து போனார் ராஜா யானை. 

ராஜாவுக்குத் தெரியும் அவர் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும்னு, இல்லனா ஒவ்வொரு யானையாக இறந்து போய்விடும். ஒரு நல்ல தீர்வை காண எல்லா யானைகளும் சுற்றி கூடி யோசிச்சாங்க. “தண்ணீர் உள்ள ஒரு இடத்துக்கு போகவில்லை என்றால் எல்லாருடைய வாழ்க்கையும் ரொம்ப மோசமாய் போக நிறைய வாய்ப்புகள் இருக்கு” என்று யானை ராஜா சொன்னார். 

“தண்ணியா! எனக்கு தண்ணீர் இருக்கும் ஒரு இடம் தெரியும். ஆனா அங்க போகணும்னா நம்ம ரொம்ப தூரம் போகனும். நம்ம எல்லாரும் அங்கே போய் விடலாம்” என்று ஒரு யானை சொன்னது. அதுக்கு எல்லா யானைகளும்  ஒத்துகிட்டாங்க, பயணத்தை ஆரம்பிச்சாங்க.

ரொம்ப தூரம் நடந்த அப்புறம் தாகமாக இருந்த யானைகள் தூரத்துல ஒரு நதியை பார்த்ததும்  நதியை நோக்கி ஓடினாங்க. அவங்க அப்படி ஓடி போகும் வழியில் தங்கியிருந்த ஒரு சுண்டெலி கூட்டத்தின் வீடு சுத்தமா அழிஞ்சு போச்சு. எல்லா எலிகளும் திடீரென  என்ன நடந்தது என்று கலந்து பேசினார்கள். 

யானைகள் புகுந்தது அறிந்து, “நம்ம எல்லாரும் யானை கிட்ட போய் நம்ம வாழும் இந்த வழியை விட்டுவிட்டு  வேற வழியாக நதிக்கு  போக சொல்லி கெஞ்சலாம்” என்று எலி கூட்டத்தில் முடிவு செய்தார்கள். எல்லா எலிகளும் யானை கூட்டத்துகிட்ட போய் அவங்களுக்கு முன்னாடி நின்னு யானை ராஜாகிட்ட பேசணும்னு பொறுமையாக கேட்டாங்க. 

“என் ராஜாவே, நாங்க இந்த நதி பக்கம் ரொம்ப வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். உங்க யானைகள் இந்த வழியா தண்ணிர் குடிக்க போகும் போது நாங்க தங்கியிருக்கும் இடம் சுத்தமாக அழிந்து போகிறது.

இப்பவே பாதி இடத்தை இழந்து விட்டோம் தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்!. உங்கள் யானைகளை வேற வழியே போய் தண்ணி குடிக்க சொல்லுங்க” என்று எலிகள் யானை ராஜாவிடம் கேட்டது. “சரி, அப்போ நான் என் கூட்டம் கிட்ட பேசுறேன்” என்ற யானை ராஜா, தன் கூட்டத்தில் “யானைகளே நம்ம தண்ணீர் குடிக்க போகிற வழியில ஒரு சுண்டெலி கூட்டம் இருக்கு. நம்ம ஓடி வரும்போது அந்த இடத்தை சேதப்படுத்திட்டோம். 

இப்ப இருந்து அவங்க வழியில வராம நாம வேற வழியே தான் போகணும்”. என்றது. “ஐயோ,! ராஜா  நீங்க ஒரு சின்ன விலங்கு கிட்ட பேசினதே பெரிய விஷயம் அவங்களுக்கு  இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீங்க. 

நாங்க இதுக்கு ஒத்துக்க மாட்டோம்” என்றது ஒரு யானை. “நேரம் வரும்போது அவங்க உதவி நமக்கு தேவை. நாளையிலிருந்து நம்ம வேறு வழியா தான் போகணும்”. என்று ராஜா யானை தன் கூட்டத்திடம் சொன்னது. யானைகள் ராஜா சொன்னது போல அடுத்த நாள் வேற வழியா தண்ணி குடிக்க போனார்கள். 

தண்ணீர் குடித்து விளையாடி ரொம்ப ஜாலியா இருந்தாங்க, ஆனா அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் யானைகள் நதியில் விளையாடிட்டு  இருக்கும்போது சில வேட்டைக்காரர்கள் அதை பாத்திட்டு, அவங்கள பிடித்துக் கொண்டு போகணும்னு நினைச்சாங்க. 

அடுத்த நாள் வழக்கம்போல யானைகள் நதிக்கு போய்க்கொண்டிருக்கும் போது திடீரென சில யானைகள் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கயிறு பொறிக்குள் மாட்டிக்கொண்டங்க. 

elephant story in tamil

யானைகள் தலைவரும் அதில் மாட்டி இருந்தார். அவர் மற்ற யானைகளிடம் “எல்லோரும் உடனே எலிகள் தங்கி இருக்கும் இடத்துக்குப் போங்க, இங்கு நடந்ததைப் பற்றி அவங்க கிட்ட சொல்லுங்க அந்த வேட்டைக்காரர்கள் திரும்பி வருவதற்குள் நமக்கு உதவி செய்ய சொல்லுங்க” என்றது. உடனே அந்த யானைகள் எலிகள் கிட்ட போய் நடந்ததை பத்தி சொன்னாங்க அவங்க சொன்னதை கேட்டதும் யானைகள் மாட்டிய இடத்துக்கு எலிகள் வந்து, அந்த கயிற்றை கடித்து யானைகளை காப்பாற்றினார்கள். 

யானை ராஜா எலிகள் கிட்ட தன் நன்றியை சொன்னார். எலிகளை ஏளனமாக பார்த்த மற்ற யானைகள் ஒருவர் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் நாம அவங்களை எப்போதும் ஏளனமாக பார்க்க கூடாது என்று உணர்ந்து கொண்டார்கள். 

யார் திறமைகளையும் குறைத்து எடை போடக்கூடாது என்று புரிந்து கொண்ட யானைகள் எலிகள் கிட்ட மன்னிப்பு கேட்டு எல்லாரும் ஒன்றாக அங்க சந்தோஷமா இருந்தாங்க.Leave a Comment