பசியுள்ள கழுதை | கதைகள் தமிழ் | Hungry Donkey | Siruvar Kathaigal

பசியுள்ள கழுதை | கதைகள் தமிழ் | Hungry Donkey | Siruvar Kathaigal

ரொம்ப நாளுக்கு முன்னாடி கிராமத்துல ஒரு வணிகர் இருந்தாரு. அவர் பெயர் ராமு. அவரு கிட்ட ரெண்டு கழுதை இருந்திச்சு. அவர் அதுங்க மேல பொருட்களை வைத்து வேற வேற ஊருக்கு சென்று வியாபாரம் செய்திட்டு இருந்தாரு. அதுல ஒரு கழுதைக்கு எப்போவும் பசிக்கும். அது நிறைய பொருட்களை தூக்கிட்டு போகும் அதே நேரம் நிறைய சாப்பிடும். 

ஒவ்வொரு நாளும் வேலைக்கு அப்புறம் இந்த கழுதைக்கு நிறைய சாப்பாடு போடணும் இல்லேன்னா அது சும்மாவே இருக்காது. அதே ஊருல கண்ணன் என்ற இன்னொரு வணிகர் இருந்தாரு, அவர் கிட்ட ஒரு கழுதை இருந்துச்சு அது நிறைய பொருட்களை சுமக்காது. 

ஒரு நாள் ரெண்டு வணிகரும் ஒரு மரத்தடில சந்திச்சாங்க. “ராமு! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி உன் கிட்ட இருக்க கழுதை நிறைய பொருட்கள தூக்கிட்டு போகுது. என்னோட கழுதைய பாரு அது நிறைய பொருட்களை சுமக்காதுசுமக்காது. வேலையும் பண்ணாது” என்றார் கண்ணன். 

“ஐயோ கண்ணா! அது சரி தான் என்னோட கழுதை நிறைய பொருட்களை சுமக்கும் ஆனா எப்போவும் பசியா தான் இருக்கும், அதுக்கு சாப்பாடு போட்டு என் காசு எல்லாம் காலி ஆகும்.” ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு அப்டியே அவங்க வழில போய்ட்டாங்க… 

ஒரு நாள் ராமுவும் அவரோட மனைவியும் அந்த பசி உள்ள கழுதை பற்றி பேசிட்டு இருந்தாங்க. “ராதா! இந்த கழுதைய பாத்துகிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு சாப்பாடு போட்டு எனக்கு ரொம்ப நஷ்டம் ஆகுது.” என்றார் ராமு. “சரிங்க அப்போ நம்ம ஒன்னு பண்ணலாம். உங்க நண்பர் கண்ணனுக்கு இந்த கழுதையை ரொம்ப பிடிக்கும்ல அவருக்கே இத குடுத்திருங்கனு” சொன்னாங்க ராமு மனைவி. 

ராமு அவரோட மனைவி சொன்னத கேட்டிட்டு கண்ணன் கிட்ட இந்த கழுதைய கொண்டு போனாரு. “நண்பா! நீ எப்போவும் உன்னோடு கழுதை ஒழுங்கா வேலை செய்யலனு சொல்லுறதுனால நான் இந்த கழுதையை உனக்கு குடுக்கலாம் எ‌ன்று‌ ஆசை படுகிறேன்” என்றார் ராமு. “இந்த கழுதை தானே சும்மா சாப்டிட்டு இருக்கும், எனக்கு இது வேணாம்” என்றார் கண்ணன். 

“இல்லை இல்லை, இது என்கிட்ட இருந்த இன்னொரு கழுதை. உனக்கு நம்பிக்கை இல்லன பாரு இந்த கழுதை தலைல ஒரு அடையாளம் உள்ளது” என்றார் ராமு. கண்ணன் நல்லா அந்த கழுதையை கவனிச்சிட்டு காச ராமு கிட்ட குடுத்திட்டு அந்த கழுதைய வாங்கினார். 

அடுத்த நாள் கண்ணன் அவரோட சில பொருட்களை அந்த கழுதை மேல வச்சிட்டு நடக்க சொன்னாரு, ஆனா அந்த கழுதை ஒரு அடி கூட நடக்கல. கண்ணன் அந்த கழுதைக்கு பின்னாடி போய் அத தள்ளி நடக்க வைக்க ரொம்ப முயற்சி பண்ணினாரு. அது நடக்கவே இல்ல, ஆனா கோவத்துல அது அவர  காலால எட்டி உதைத்துச்சு.. 

donkey tamil siru kathaigal

அப்போ தான் கண்ணனுக்கு சந்தேகம் வந்திச்சு, அந்த கழுதை தலைல இருந்த அடையாளத்தை கையால் அழிச்சு பார்த்தார், அது அழிஞ்சு போச்சு. இந்த ராமு பொய் சொல்லி அந்த பசி உள்ள கழுதைய என்கிட்ட வித்திட்டானு ரொம்ப வருத்தப்பட்டார். 

அப்போ இந்த கழுதையை எப்படி வேல செய்ய வைக்கணும்னு எனக்கு தெரியும்னு சொல்லிட்டு, வீட்ல போய் ஒரு சோளத்தை கைல எடுத்து அத ஒரு குச்சில கட்டினான்.அந்த குச்சியை கழுதை பின்னாடி கட்டி அந்த சோளத்தை அந்த கழுதை முன்னாடி வச்சான். அந்த சோளத்தை சாபிட அந்த கழுதை முன்னாடி நடக்க ஆரம்பிச்சு. அது முதுகுல பொருட்களோட நடந்துகிட்டு இருந்திச்சு. 

அப்டியே கொஞ்ச நாட்கள்ல கண்ணன் தன்னோட புத்திசாலிதனத்தினால அந்த கழுதையை வழிக்கு கொண்டு வந்திட்டான். நிறைய வணிகர் முன்னாடி நல்ல பெயர் எடுத்தான். அப்போ ராமு கண்ணனை பாத்து ரொம்ப பொறாமை பட்டான் இந்த எண்ணம் எனக்கு முன்னாடி தோன்றவில்லை என்று. 



Leave a Comment