காகம் மற்றும் தேனீ | கதை தமிழில் | Crow and bee | sirukathaigal

காகம் மற்றும் தேனீ | கதை தமிழில் | Crow and Bee | sirukathaigal

ஒரு அழகான கோடை காலத்தில ஒருநாள் ஒரு தேனீ சுத்தி பரந்திட்டு இருந்திச்சு. அந்தத் தேனீக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு. தண்ணீர் தேடி கிட்டு ஒரு ஆற்றுப் பக்கம் வந்தது தேனீ. ஆனா தண்ணி குடிக்கணும்னா தேனீ சில பச்சை புற்களை தாண்டிதான் போகனும். அப்படிப் போகும்போது அந்த தேனீயோட கெட்ட நேரம் அது தண்ணிக்குள்ள விழுந்துச்சு. 

அதோட இறக்கை ஈரமா இருந்ததுனால பாவம் அதால நீந்தவும், பறக்கவும் முடியல, தண்ணியின் மேல வருவதற்கு ரொம்ப முயற்சி செய்தது. கொஞ்ச நேரத்துல தேனீயால் சுத்தமாக முடியல அது கொஞ்சம் கொஞ்சமா தண்ணிரில் முழுக ஆரம்பிச்சது. அப்போ ஒரு காக்கா பக்கத்துல இருந்த மரத்தில  இருந்துச்சு. திடீர்னு இந்த தேனீ கஷ்டப்படுவதைப் பார்த்து எப்படியாவது தேனீக்கு உதவி செய்யணும்னு ஒரு வழிய தேடிச்சு. 

Crow

அப்போ பக்கத்துல ஒரு இலையை  பார்த்து அதை கொண்டு போய் தண்ணில மாட்டிக்கொண்டு தவிக்கிற தேனீ பக்கத்துல போட்டுச்சு. உடனே அந்த தேனீ அந்த இலை மேலே ஏறி பத்திரமா கரை சேர்ந்துச்சு. 

கரைக்கு வந்ததும் மேலே இருந்த காக்காவை பார்த்து சொல்லுச்சாம் “ரொம்ப நன்றி, நீங்க என் வாழ்க்கையை காப்பாத்திட்டீங்க, நான் யாருன்னு கூட உங்களுக்கு தெரியாது. ஏன் எனக்கு உதவி செஞ்சீங்க?” அதற்கு அந்த காகம் “உனக்கு உதவி தேவைப்பட்டது உனக்கு எதுவும் ஆகக்கூடாது என நினைச்சேன் அதான் உதவி செஞ்சேன்” என்றது. 

“உதவி செஞ்ச உங்களுக்கு நான் என்னைக்கும் கடமை பட்டு இருக்கேன்” என்று தேனீ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றது. கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த காட்டுக்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான், காக்கா மரத்தில உட்கார்ந்து இருந்ததை பார்த்தான். காக்காவை நோக்கி குறிவைத்தான். அப்படி குறிவைத்து ரெடியா இருக்கும் போது ஒரு பூச்சி வேட்டைக்காரன் கையை கடிச்சிடுச்சு, அதனால குறி மிஸ் ஆயிடுச்சு. அதை பார்த்ததும் காக்கா அங்க இருந்து தப்பிச்சு போயிருச்சு. அந்த பூச்சி வேற யாரும் இல்ல அன்னைக்கு காக்கா காப்பாத்தின தேனீ தான். 

அதற்குப் பிறகு காகம் தேனீயை பார்த்து “ரொம்ப நன்றி நண்பனே! நீ என்ன காப்பாத்திட்ட. இனிமேல் நம்ம எப்பவும் நண்பர்கள் தான் என்றது. “பரவாயில்லை காக்கா நான் உனக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தேனீ பதிலளித்தது. சூரியன் மறையும் பக்கமாக தேனீயும், காக்காவும் பறந்து சென்றது. அப்போதுல இருந்து காகமும், தேனீயும் எப்பவும் நண்பர்களா இருந்தாங்க. 

நீதி:  இரக்கமாயிருந்தால் அது என்றைக்கும் நல்லதுதான்.Leave a Comment