ஆடுகள் | சிரிப்பு கதைகள் | Clever goats | Comedy Stories In Tamil
ராஜு, ராமு, ரானா என்னும் மூன்று ஆட்டுக்குட்டிகளும் அன்பான சகோதரர்கள். அவங்க ஒரு அழகான வைக்கோல் வீட்டில் வாழ்ந்து வந்தாங்க. ஒரு நாள் ஒரு தந்திரமான ஓநாய் அவங்க வீட்டுக்கு பக்கத்துல குடி வந்துச்சாம்.
அத பார்த்த சகோதரர்கள் பயந்து போய்ட்டாங்க. பெரிய ஆட்டுக்குட்டி சொல்லுச்சாம், “அந்த ஓநாய் நம்மள எப்ப வேண்டுமென்றாலும் புடிச்சு சாப்பிடலாம். நம்ம ஜாக்கிரதையா இருக்கணும், இந்த வீடும் அவ்வளவு பாதுகாப்பானது இல்லை”.
தம்பி ஆடுகளும் அதுக்கு ஒத்துகிச்சாம். அதனால அவங்க ஒரு பலமான வீடு கட்ட முடிவு பண்ணாங்க. சீக்கிரமாவே அந்த வீட்டையும் கட்டி முடிச்சுட்டாங்க, அந்த வீடு ரொம்ப அழகாகவும், பலமானதாகவும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த மூணு ஆட்டு குட்டிகளை பிடித்து சாப்பிடலாம்னு அந்த ஓநாய் வீட்டுக்கு பக்கத்துல வந்து வீட்டுக்கதவை தட்டிச்சாம்.
ஆனா அவங்க கதவு திறக்கல, “ஹே, கதவ திறக்குறீங்களா இல்லையா, இல்லனா கதவை உடச்சிட்டு உள்ள வந்துடுவேன்”. அப்படி சொல்லிட்டு ஓநாய் அந்த கதவை உடைக்க ரொம்ப நேரம் முயற்சி பண்ணிச்சாம், ஆனா அந்த பலமான கதவ உடைக்கவே முடியல.
ரொம்ப கோபம் அடைந்த ஓநாய் அடுத்து ஒரு திட்டத்தை போட்டிச்சாம். அந்த வீட்டுக்கு மேலே ஏறி, மேலே இருக்கிற புகைபோக்கி வழியாக உள்ளே நுழைய பார்த்துச்சு. ஆனாலும் அந்த ஆட்டுக்குட்டிங்க ஏற்கனவே ரொம்ப புத்திசாலித்தனமா திட்டம் போட்டு வச்சிருந்தாங்க. குளிர்காய விறகு அடிக்கி நெருப்பு மூட்டி காத்துட்டு இருந்தாங்க.
ஓநாய் புகை போக்கி வழியாக நெருப்புல வந்து விழுந்து, ஐய்யோ! ஐய்யோ! என்று கத்த ஆரம்பிச்சுதாம். அந்த நெருப்பு பட்ட காயத்துடன் ஓடின ஓநாய், அதுக்கு அப்புறம் அந்த ஆடுகளின் பக்கம் வரவே இல்லை. அந்த ஆடுகளில் புத்திசாலித்தனத்தால அந்த ஓநாய அடிச்சு விரட்டிட்டாங்க