பூனைக்கு யார் மணி கட்டுவது? | தமிழ் கதைகள் | tamil story books

பூனைக்கு யார் மணி கட்டுவது? | தமிழ் கதைகள் | tamil story books

ஒரு காலத்துல ஒரு மளிகை கடைக்கு உள்ள நிறைய எலிகள் வாழ்ந்து வந்துச்சாம். அந்த மளிகை கடையில இருந்த எல்லாப் பொருட்களையும் சாப்பிட்டு, அதுங்க ரொம்பவே பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க.  இது அந்தக் கடைக்காரருக்கு ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியது.

அதனால அந்த எலிகளோட பிரச்சனையை அடக்க ஒரு பூனையை கொண்டு வந்தாரு. அந்தப் பூனை வந்த கொஞ்ச நாளிலேயே நிறைய எலிகள சாப்பிட்டுச்சு. உயிரோடு இருந்த மீதி கொஞ்ச எலிகளும் இந்தப் பூனைக்கு பயந்து வாழ்ந்திட்டு வந்தாங்க.

இந்தப் பூனை வந்ததுக்கு அப்புறம் அவங்க சந்தோஷமும் போய் அவங்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லையாம். அந்த பூனையோட பிரச்சனைக்கு ஒரு முடிவு காண தலைவர் எலி ஒரு கூட்டத்தை கூட்டினாராம்.

“அந்தப் பூனையை எப்படியாச்சும் நம்ம ஒளித்து கட்டனும்” என்று தலைவர் எலி சொல்லுச்சாம். அப்போ ஒரு குண்டு எலி யோசனை சொல்லுச்சாம், “அந்தப் பூனை எப்ப நம்மள வேட்டையாட வரும்னு நமக்குத் தெரிஞ்சா, அத வைத்து நம்ம உயிரை காப்பாத்திக்கலாம்”.

அதற்கு இன்னொரு எலி ஒரு ஐடியா சொல்லுச்சாம், “பேசாம அந்த பூனை  கழுத்தில மணியைக் கட்டிவிட்டா என்ன”. அந்த யோசனையை மற்ற எலிகள் எல்லாம் ஏத்துகிட்டாங்க. அந்த புத்திசாலி எலிய எல்லா எலிகளும் பாராட்டுச்சாம்.

அப்போ ஒரு வயசான எலி எழும்பி ஒரு கேள்வி கேட்டுச்சாம், “கொஞ்சம் இருங்க ஒரு முக்கியமான பிரச்சனை அந்தப் பூனைக்கு யாரு மணியை கட்டி விடுவாங்க, அத முதல்ல சொல்லுங்கனு” என்று வயதான எலி கேட்டிச்சாம். உடனே எல்லா எலிகளும் அமைதியா இருந்துச்சாம். பூனைக்கு மணி கட்ட அந்த எலிகள் யாருக்குமே தைரியம் இல்ல.

நீதி: யோசனையை மட்டும் வச்சுக்கிட்டு  தைரியம் இல்லனா காரியத்தை சாதிக்க முடியாது.Leave a Comment