பூனையும் நரியும் | தமிழ் கதைகள் | Cat And Fox | Siruvar Kathai
ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்துச்சு. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அதுங்கள பிடிக்காது”, என்று நரி சொல்லிச்சு. “ஆமா ஆமா எனக்கும் அவங்கள சுத்தமா புடிக்காது” என்று பூனையும் சொன்னது.
“அதுங்க ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அதுங்களால என்ன புடிக்க முடியாது. ஏன்னா, அதுங்க கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்லு”, என்று அந்தப் பூனை கேட்டது.
அதுக்கு நரி சொல்லிச்சு, “வழியா ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. அப்படி எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.
“நிஜமாகவா” என்று அந்தப் பூனை கேட்டுச்சு. அதுக்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதுல ஒண்ணு கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏன்னா அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க பண்ணக் கூடியது” என்று அந்த நரி பெருமையா பேசிக்கிட்டு இருந்து. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக்கொண்டிருக்கும்போது வேட்டை நாய்கள் ஓடி வர சத்தம் கேட்டது.
உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாத்திக்க போறேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்துல ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாத்திக்க போறேன்னு நானும் பாக்குறேன்” என்று அந்த நரி கிட்ட பூனை சொன்னது.
அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தி பாத்திச்சு ஆனா அதால அந்த வேட்டை நாய்கள் கிட்ட இருந்து தப்பிக்க முடியல. வேட்டை நாய்கள் அந்த நரியை கொன்று சாப்பிட்டுச்சாம்.
நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.