தாகமான காகம் | சிறுவர் கதைகள் | Thirsty Crow | Moral Stories In Tamil

தாகமான காகம் | சிறுவர் கதைகள் | Thirsty Crow | Moral Stories In Tamil

ஒரு காட்டில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இந்த காகம் பயணம் செய்தது. அதற்கு மிகவும் தாகமாய் இருந்தது. 

அதனால் ஒரு இடத்துல நின்று தண்ணியை தேடியது. ஆனால் ஒன்றுமே கிடைக்கவில்லை. அதனால ரொம்ப பலவீனமா ஆயிடுச்சு. ஆனால் தன்னுடைய நம்பிக்கையை விடாமல் அந்த காட்டு முழுக்க தண்ணிய தேடிப் போனது. 

பறந்து கொண்டே தண்ணீர் தேடும் போது ஒரு வீட்டை கண்டுபிடித்தது காகம். அந்த வீட்டுக்குள்ள தண்ணீர் இருக்கும்னு நினைத்து காகம் அந்த வீட்டில் மேல் கூரையில் உட்கார்ந்தது. 

அந்த வீட்டுக்குள்ள ஒரு பானையை பார்த்தது. உடனே அந்தப் பானை கிட்ட பறந்து போய் பானைக்குள் பார்த்தது. அனால் பானைக்குள் ரொம்ப கொஞ்சம் தண்ணி தான் இருந்தது. தண்ணிய பார்த்ததும் காகம் ரொம்ப சந்தோஷப்பட்டது. 

ஆனால் தண்ணீர் ரொம்ப குறைவாக இருந்ததினால் காகத்தால தண்ணீரை குடிக்க முடியலை. ரொம்ப நேரத்துக்கு அப்புறம் காகத்துக்கு ஒரு யோசனை வந்தது. இந்த பானைக்குள்ள சில கற்களை போட்டால் நீர் கண்டிப்பாக மேலே வரும் அப்போ நான் இந்த தண்ணீரை குடிக்கலாம் என்று நினைத்தது காகம். 

Crow tamil kathaigal 1

அந்த யோசனைக்கு அப்புறம் உடனே கற்களை தேட ஆரம்பித்தது. பக்கத்துல சில கற்களை கண்டுபிடித்தது. அந்தக் கற்களுக்கு பக்கத்தில் சென்று தன்னுடைய வாயால் ஒரு நேரத்தில் ஒரு கற்களை எடுத்து அந்த பானையில் போட்டது. 

ஆனால் தண்ணி கொஞ்சமாகத் தான் மேல வந்தது. இருப்பினும் காகத்தால அந்த தண்ணீரை தொட முடியலை. தன்னுடைய நம்பிக்கை விடாம ஒவ்வொரு கற்களை எடுத்து பானையை நிரப்ப ஆரம்பித்தது. 

நிறைய கற்களை போட்டதுக்கு அப்புறம் தண்ணி மேல வந்தது. காகம் ரொம்ப சந்தோஷப்பட்டது. வயது நிரம்ப நிரம்ப தண்ணீர் குடித்தது. தன்னுடைய எல்லா நண்பர்களையும் தண்ணி குடிக்க அழைத்தது. நிறைய பறவைகள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு காகத்துக்கு நன்றி சொல்லிட்டு பறந்து போனது. 

கருத்து: இந்த திறமையான காகம் புத்திசாலித்தனமாக யோசித்து தனக்கு வேண்டியதை அடைந்தது. அதேபோல் நீங்களும் ஞானமா செயல்படும் செயல்பட வேண்டும். Leave a Comment