ஒரு ரூபாய் | ராஜா கதைகள் | One rupee | Tamil Stories In Tamil

ஒரு ரூபாய் | ராஜா கதைகள் | One rupee | Tamil Stories In Tamil

முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போது வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை  ஒரு ஏழைக்கு கொடுக்கணும்னு நினைசாரு. 

அவர் போற வழியில அவரால் எந்த ஏழையையுமே பாக்க முடியல. அதனால அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே கொஞ்ச நாள் கடந்து போச்சு. ஒருநாள் முனிவர் காலைக்கடன் செய்வதற்கு வெளியே வந்தார்.அவர் வெளியே வந்ததும் ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போய் கொண்டு இருந்தார். 

அப்போ அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாக  சொல்லி அவரிடம் அவர்கள் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா கேட்டதுக்கு அப்புறம் முனிவர் கொஞ்ச நேரம் யோசிச்சு ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாய் கொடுத்தார். 

உடனே ராஜாவுக்குக் கோபம் வந்துச்சு ராஜா முனிவரை பார்த்து “எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கேட்டாரு. அப்ப முனிவர் சொன்னார் “நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன். அப்ப யோசித்தேன் இது ஒரு ஏழைக்கு கொடுத்தால் நல்லா இருக்கும்னு, ஆனால் எவ்வளவு தேடியும் என்னால ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியல… கடைசியா கண்டுபிடிச்சுட்டேன்” அப்படின்னு  சொன்னாரு. 

அதுக்கு ராஜா “நான் ரொம்ப பணக்காரன் என்கிட்ட நிறைய பணமும், நிலங்களும் இருக்கு. ஆனால் நீங்க என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?” என்று கேட்டார். அப்ப முனிவர் சொன்னார் “உன்கிட்ட இவ்வளவு பணம் இருந்தும் இப்ப பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய்….. 

உன்ன விட ஒரு ஏழையை என்னால பாக்க முடியாது. அதனால  தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்” என்றார். ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவர் கிட்ட மன்னிப்பு கேட்டார். 

தன் ராணுவத்திடம் போரை நிறுத்தச் சொல்லி கட்டளை போட்டார். அந்த ஒரு ரூபாய்  ராஜாவுடைய குணத்தை மாத்திடுச்சு.  

எனவே நம்ம எப்பவும் பேராசைப் படக் கூடாது.



Leave a Comment