மந்திர கிணறு | சிறுவர் கதைகள் | Magical well | Story In Tamil

மந்திர கிணறு | சிறுவர் கதைகள் | Magical well | Story In Tamil

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல அரவிந்த் என்ற நில உரிமையாளர் இருந்தார். அவர் ரொம்ப ஒழுக்கமானவர் தினமும் காலையில சேவல் கூவும்போது எழுந்திடுவார். அப்புறம் அவர் வேலை ஆட்களை எழுப்பி அங்குள்ள நிலத்தில் வேலை செய்ய அனுப்புவார். 

சந்திரன் மற்றும் சூரி அரவிந்திடம் புதுசா வேலைக்கு சேர்ந்தவர்கள். 

ஆனா அவங்க ரொம்ப பெரிய சோம்பேறிகளாக இருந்தார்கள். தினமும் எழுந்து வேலைக்கு போவது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. 

தினமும் ரெண்டு பேரும் ஒரு கிணற்றுக்கு பக்கத்தில் தான் தூங்குவாங்க அப்ப ஒரு நாள் சந்திரன் சூரிகிட்ட “தினமும் காலையில் எழுந்து வேலைக்கு போகிறது ரொம்ப கஷ்டமா இருக்குடா” என்றான். அதற்கு “நானும் அப்படி தான் யோசிக்கிறேன், ஆனா நாம என்ன பண்றது சேவல் கூவினதும் நில உரிமையாளர் எழுந்து நம்மையும் எழுப்பிவிடுகிறார்.” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

இவர்கள் பேசியதை கேட்ட நில உரிமையாளர் அவங்க இரண்டு பேரின் குணங்களையும் தினமும் கவனித்தார். கடைசியா அவர் அந்த இரண்டு பேருக்கும் ஒரு பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். 

ஒரு நாள் அந்த இரண்டு பேரும் கிணற்றுக்கு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கிணற்றுக்கு அடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. “சூரி இன்னும் எவ்வளவு நேரம் தான் தூங்குவ உடனே சென்று வேலையை பார்” என்று அந்த குரல் சொன்னது. 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சூரி இந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் அவன் பக்கத்தில் படுத்திருந்த சந்திரன் தூங்கிக் கொண்டு இருந்தான். அதனால் அந்த குரல் எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை, ஏதோ கெட்ட கனவாக இருக்கும் என்று நினைத்து மறுபடியும் தூங்கிவிட்டான். 

அடுத்த நாள் மறுபடியும் இரண்டு பேரும் கிணற்றுக்கு பக்கத்தில் தூக்கிக்கொண்டு இருந்தார்கள். இந்த முறை சந்திரனுக்கு அதே குரல் கேட்டது. அவனும் சூரியைப் போல எழுந்து சுற்றி முற்றி பார்த்தான் யாரும் இல்லை. சூரி அசந்துபோய் தூங்கி கொண்டு இருந்தான். அதனால் சந்திரனும் தூங்கிவிட்டான்.

former by tamil kathaigal

அடுத்த நாள் கிணற்றுக்கு பக்கத்தில் தூங்கும் போது இரண்டு பேருக்கும் அந்த மோசமான ஒரு சத்தம் கேட்டது. ஒரே நேரத்துல ரெண்டு பேரும் ரொம்ப பயத்தோட எழுத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்க, “டேய் சூரி உனக்கு அந்த சத்தம் கேட்டதா” என்று சந்திரன் சூரியிடம் கேட்டான். 

“ஆமா, நான் ரொம்ப பயந்துட்டேன் அது ஒரு கெட்ட கனவு இல்லை அந்த சத்தம் இந்த கிணற்றுக்குள் இருந்து தான் வருது நான் வேலைக்கு கிளம்புறேன் உனக்கு வேணும்னா நீயும் வா” என்று கூறி சூரி வேலைக்கு செல்ல தயாரானான். 

“நில்லுடா நானும் உன்னோட வரேன்” என்று சந்திரனும் வேலைக்கு சென்றான். அந்த நாள் அவங்க இரண்டு பேரும் ரொம்ப கடினமா நிலத்தில் வேலை செய்தார்கள். அன்றைக்கு மதியம் வேலை முடிந்ததுக்கு அப்புறம் மதிய சாப்பாடுக்காக நில உரிமையாளர் வீட்டுக்கு வந்தார்கள். 

அந்த ரெண்டு பேரும் சாப்பிட உட்கார்ந்த போது அவர்களிடம் முகம் ரொம்ப பயத்துடனும், கவலையுடனும் இருந்தது. நில உரிமையாளர் அவங்க முகத்தை பார்த்து “ஏன் சோகமாக இருக்கிறீர்கள்” என்று கேட்டார். சந்திரன் மற்றும் சூரி அவங்க கேட்ட அந்த மோசமான சத்தத்தை பற்றி சொன்னார்கள். நில உரிமையாளர் இதைக்கேட்டு சத்தமாக சிரித்தார். 

“அது ஒரு மாயமும் இல்லை, கனவும் இல்லை நீங்க இரண்டு பேரும் சோம்பேறியா இருப்பதை நான் கவனித்தேன். உங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் தான் கிணற்றுக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்து அந்த பயங்கரமான சத்தங்களை ஏற்படுத்தினேன். இப்போ உங்களுக்கு புரிகிறதா, இப்ப இருந்து உங்க சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உங்கள் வேலைகளை ஒழுங்காக பண்ணுங்கள்” என்றார். 

அன்றிலிருந்து சூரி மற்றும் சந்திரன் அவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் ரொம்ப கடினமா நிலத்தில் உழைத்து அவங்க வாழ்வதற்கு தேவையானதை சம்பாதித்து ரொம்ப சந்தோஷமா இருந்தார்கள். Leave a Comment