மந்திர கோடாரி | தமிழ் கதைகள் | Magical Axe | Fairy Tales Story In Tamil
முன்னொரு காலத்தில் கிராமத்துக்கு ரொம்ப தூரத்தில் இருந்த காட்டில் ஒரு நேர்மையான மரம் வெட்டுபவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து தினமும் கடினமாக உழைத்து வந்தார். அப்படி இருந்தும் அவருக்கு சாப்பிட பணமே இல்லாமல் ஏழையாக இருந்தார்.
ஒரு நாள் ரொம்ப தூரத்தில் இருக்குற ஒரு இடத்தில் மரம் வெட்டப் போனார். முழு தூரத்தையும் நடந்தே கடந்து ஒரு நல்ல மரத்தை வெட்ட பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு சரியான மரத்தைப் பார்த்ததும் அதை வெட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது அவர் பிடித்துக் கொண்டிருந்த கோடாரி கை தவறி பக்கத்தில் இருந்த ஆற்றில் விழுந்து.
மரம் வெட்டுபவர் இதை பார்த்ததும் அழத் தொடங்கினார். “என்கிட்ட அந்த ஒரு கோடாரி மட்டுமே இருந்தது. இப்ப நான் அதையும் தொலைத்துவிட்டேன். இப்ப நான் எப்படி பணம் சம்பாதிப்பது” என்று புலம்பினார். அவர் அழுது கொண்டிருக்கும் போது பக்கத்துல இருந்து ஒரு சத்தம் கேட்டது.
அவர் திரும்பி பார்க்கும் போது ஒரு பெண் ஆற்றில் இருந்து வெளியே வந்தாள். “நான் தான் இந்த நதியின் தெய்வம் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கோடாரி வந்து என் பக்கத்தில் விழுந்தது. அது எங்கிருந்து வந்தது என்று பார்க்க வந்தேன்.
அப்போது தான் நீ அழுது கொண்டு கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்ன ஆச்சு” என்று கேட்டாள் அந்த பெண் தெய்வம். மரம் வெட்டுபவர் கண்ணை துடைத்துவிட்டு சொன்னார் “தெய்வமே தண்ணீரில் விழுந்த அந்த கோடரி என்னுடையது தான் நான் ஒரு ஏழ்மையானவன். நான் சில மரங்களை வெட்டி அதன் மூலமாக பணம் சம்பாதிக்கிறேன்.
இப்போ என் கோடாரி தண்ணிக்குள்ள விழுந்ததினால் என்னால இனிமேல் பணம் சம்பாதிக்க முடியாது. என்னுடைய கோடாரியை எனக்கு திரும்ப கொடுத்திற்களென்றால் நான் உங்களுக்கு ரொம்ப நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்றான்.
அந்தப் பெண் தெய்வம் இதைக் கேட்டதும் தண்ணிக்குள் சென்று ஒரு பெரிய தங்க கோடாரியை வெளியே கொண்டு வந்தாள். பெண் தெய்வம் அந்த தங்க கோடாரியை மரம் வெட்டுபவரிடம் கொடுத்தாள். அவர் “அது என்னுடையது இல்லை” என்று சொன்னார் பெண் தெய்வம் மறுபடியும் தண்ணிக்குள் சென்று மரம் வெட்டுபவர் கோடாரியை தேடச்சென்றாள்.
இந்த முறை ஒரு பெரிய வெள்ளி கோடாரியை கொண்டு வந்தாள். மரம் வெட்டுபவர் சொன்னார் “இதுவும் என்னுடையது இல்லை” இந்த முறை அவர் ரொம்ப சோகமாக தன்னுடைய கோடரி திரும்ப கிடைக்கவே போவதில்லை என வருத்தப்பட்டார்.
பெண் தெய்வம் அந்த மரம் வெட்டுபவருடைய நேர்மையை பார்த்து திரும்பவும் தண்ணிக்குள் சென்று ஒரு இரும்புக் கோடரி எடுத்துவிட்டு வெளியே வந்தாள். மரம் வெட்டுபவர் அந்தக் கோடாரியைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அவருடைய கோடாரியை அவருக்கு திரும்பக் கொடுத்தாள்.
அவர் அந்தப் பெண் தெய்வத்துக்கு நன்றி சொன்னார். பெண் தெய்வம் அந்த மரம் வெட்டுபவருடைய நேர்மையை பாராட்டி அதற்குப் பரிசாக அந்த தங்க கோடாரி மற்றும் வெள்ளி கோடரியை அவருக்குக் கொடுத்தாள்.
மரம் வெட்டுபவர் அந்த மூன்று கோடாரியையும் எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சந்தோஷமா திரும்பினார்.
கருத்து: நீங்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் அதை நேர்மையாய் செய்யதால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.