பேராசை பிடித்தவர் | தமிழ் கதைகள் | Greedy men | Small Story In Tamil
முன்னொரு காலத்தில ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தார்கள். அவங்க போற வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்க்கிறார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்க காசுகள் இருந்து.
“ஆஹா! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனக்கு இவ்வளவு தங்க காசுகள் கிடைத்திருக்கு” என்று ரொம்ப பெருமையா ராமு கிட்ட சோமு சொன்னார். அப்போது ராமு சொன்னார் “நீ மட்டும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாத நம்ம ரெண்டு பேரும் அதிர்ஷ்டசாலி” என்று சொல்லு என்றார்.
“அது எப்படி முடியும் நான் தான் இந்த பையை முதல்ல பார்த்தேன். அதனால எல்லா தங்கமும் எனக்கு தான். அப்புறம் அதிர்ஷ்டமும் எனக்கு தான் உனக்கு இல்லை” அப்படின்னு சொன்னார் சோமு.
சோமு சொன்னதைக் கேட்ட ராமு எதுவும் பேசவில்லை. தேவை இல்லாமல் சண்டை போடக்கூடாது என்று நினைத்தார் ராமு. அந்த சமயத்தில் யாரோ பின்னாடி இருந்து திருடன், திருடன் என்று கத்துனாங்க. அப்போ அவங்க திரும்பி பார்க்கும் போது கையில் கம்போடு சிலர் தங்களை நோக்கி ஓடிவருவதை பார்க்கிறார்கள்.
அப்போது சோமு சொன்னார் “ஐயோ! கடவுளே இப்போ நம்மை இவங்க தங்கத்தோட பார்த்தா நாம மாட்டிக்குவோம், நம்மள ரொம்ப அடிப்பாங்க” என்று கவலையோடு சொன்னார். அதுக்கு ராமு சொன்னார் “நம்ம இல்லை. நீதான் மாட்டுவாய், உன்னை தான் பயங்கரமா அடிப்பாங்க. நீ சொன்னல்ல அந்த தங்கம் உனக்கு மட்டும் தான் சொந்தம் என்று இப்போ அவங்க தர போகும் அடியும் உனக்கு மட்டுமே சொந்தம்” என்றார்.
நீதி: நாம் நமது அதிர்ஷ்டத்தை மத்தவங்களோட பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் நம்மளோட கெட்ட சமயத்தில் அவங்க நம்மோடு இருப்பாங்கன்னு யோசிக்கிறது முட்டாள்தனம்.