எறும்புகளின் ஒற்றுமை | சிறுவர் கதை | The unity of ants | Tamil Short Stories

எறும்புகளின் ஒற்றுமை | சிறுவர் கதை | The Unity of ants | Tamil Short Stories

அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மரத்தின் ஓட்டைக்குள்ள பாம்பு ஒன்று வசித்து வந்தது. அந்த பாம்பு தவளைகளையும், வாத்து, பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடும். 

பகல் முழுக்க தூங்கி இரவில் சரியான நேரத்தில் வேட்டையாடும் சில நாட்களுக்கு அப்புறம் பாம்பு பெருசா வளர்ந்து. அதனால அந்த அந்த மரத்தின் ஓட்டைக்குள் அந்த பாம்பால் போக முடியலை. 

snake eating frog

அதனால ஒரு புது வீட்டுக்கு மாற யோசித்தது. புது வீடு தேடும்பொழுது ஆலமரத்துல ஒரு பெரிய ஓட்டை இருந்ததை பார்த்தது பாம்பு. 

ஆனால் அந்த மரத்துக்கு கீழே எறும்பு புற்று ஒன்னு இருந்தது. பாம்பு அந்த ஆலமரத்துக்கு பக்கத்துல வந்து “இனிமேல் நான் இந்த மரத்தில்தான் இருப்பேன் நீங்க எல்லாரும் உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பனும்” என்று சொன்னது. 

அங்கு இருந்த எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப பயந்து போனங்க. ஆனால் எறும்புகள் மட்டும் பயப்படவில்லை. அது அந்த எறும்புகளின் ஒற்றுமையால் நல்ல வேகமா கட்டப்பட்ட புற்று. 

அதனால் எல்லா எறும்புகளும் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் முன்னேறி பாம்பு சுத்தி நின்று பாம்பை தாக்க அரம்பித்தார்கள் எறும்பு கடியால் எற்பட்ட தாங்க முடியாத வலியால் பாம்பு அந்த இடத்தை விட்டு ஓடிப் போனது. 

அதுக்கப்புறம் அந்த இடத்துக்கு வரவே இல்லை. அன்றிலிருந்து எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள். 

நீதி: ஒற்றுமையே பலம். 



Leave a Comment