குரங்கும் தொப்பியும் | தமிழ் கதைகள் | Monkey And Hat | Tamil Moral Story
ஒரு ஊர்ல ஒரு ஆளு தொப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அவருடைய தொப்பிகளை எல்லாம் அவர் ஊர் முழுக்க சுத்தி வித்துக்கிட்டு இருந்தார்.
ஒரு நாள் அவர் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு போனார். அப்போது ரொம்ப சோர்வாகவும், பலவீனமாகும் ஆனார். உயர் சூரியனும், அதிகமான சூடும், ரொம்ப பசியும் அவனுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு.
அதனால அவர் போகிற வழியில ஒரு மரத்துக்கடியில் அவருடைய சாப்பாட்டையும், தண்ணீரையும் குடித்து விட்டு அந்த தொப்பி பையை அவரோட அருகிலேயே வச்சுட்டு நிம்மதியா படுத்து தூங்கிட்டாரு.
கொஞ்ச நேரம் கழித்து எழுந்த உடனே தன்னுடைய பை காலியாக இருக்கிறது பார்க்கிறாரு. யாரோ அவருடைய எல்லாத் தொப்பிகளையும் திருடிட்டாங்க.
உடனே சுத்தி எல்லா இடத்துலயும் தேடுறாரு. அப்போ மரத்துக்கு மேலே ஒரு சத்தத்தை கேட்கிறார். அவர் மேலே பார்க்கும் போது நிறைய குரங்குகள் தொப்பையை வெச்சுட்டு இருந்துச்சு.
ஒவ்வொரு குரங்கும் ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு இருந்தது. “ஓ நான் தூங்கும்போது இதுதான் நடந்துசா” அப்படின்னு யோசிச்ச தொப்பி வியாபாரி “என் தொப்பிகளை எனக்குத் திருப்பிக் கொடு” என்று குரங்குகிட்ட சொன்னாரு.
குரங்குகள் யாரு சொல்லுறத கேட்கும், அது தொப்பிகளை திருப்பி தர மறுத்தது. அதற்கு அந்த வியாபாரி குரங்குகளை பார்த்து ரொம்ப கோவமா சத்தம் போட்டாரு. அதுங்களும் திருப்பி சத்தம் போட்டது.
உடனே அவர் கை தட்டினார், குரங்குகளும் திருப்பி கைகளைத் தட்டியது. அவரு ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார், அதற்கு குரங்குகள் மரத்தில இருந்து பழங்களை தூக்கிப் போட்டது.
அவர் குரங்குகளை அடிப்பேன் என்று மிரட்டினார். அதற்கு குரங்குகள் அந்த வியாபாரிய பார்த்து சிரிச்சுது. அவருக்கு ரொம்ப குழப்பமா இருந்தது. அதனால அவருக்கு என்ன பண்றதுன்னு தெரியல.
அது பற்றி யோசிக்கும் போது அவர் தலையில் இருந்த தொப்பியை ஒரு கையில் எடுத்து இன்னொரு கையால அவருடைய தலையை சொறிஞ்சார். உடனே குரங்குகளும் அதே மாதிரி பண்ணியது.
அதை பார்த்த அந்த வியாபாரிக்கு ஒரு யோசனை வந்தது. அவருடைய தொப்பியை கீழே தூக்கிப் போட்டார். குரங்குகளும் அதேபோல் தொப்பிகளை கீழே தூக்கிப் போட்டது. அப்போ அந்த வியாபாரி எல்லா தொப்பிகளையும் எடுத்து பையில் வைத்து அந்த இடத்தை திரும்பிப் பார்க்காமல் சந்தோஷமாக ஓடிட்டாரு.
அந்த வியாபாரி தன்னோட யோசனையால குரங்குகளின் இருந்து தப்பித்து கொண்டார்.