மந்திர மணி | தமிழ் கதைகள் | Magic Bell | Tamil Fairy Tales Stories 

மந்திர மணி | தமிழ் கதைகள் | Magic Bell | Tamil Fairy Tales Stories

முன்னொரு காலத்துல ஒரு நதிக்கு பக்கத்துல ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் இருக்கிற எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்து பணம் சம்பாதிச்சாங்க. 

அந்த கிராமத்துல ராமு என்று ஒரு பையன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மாடு மேய்க்கிற பையன், அவன் ரொம்ப நல்லா பாடுவான். தினமும் காலையில் எல்லா மாடுகளையும் மேச்சலுக்காக காட்டுக்கு கூட்டிட்டு போவான். 

அந்த காட்டுல ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டு இருக்கும் போது, அவன் அந்த மரத்துக்கு கீழே உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டே பாடுவான். சாயங்காலம் வரைக்கும் மாடுகளை மேய்த்து விட்டு தன் முதலாளி கிட்ட மாடுகளை கூட்டிட்டு வருவான். 

அந்த வேலைக்கு தினமும் அவன் முதலாளி ஒரு ரூபாய் கொடுத்தார்.  அந்த காசை எடுத்துகிட்டு அவன் வீட்டுக்கு வருவான். அவன் வீட்டில் அம்மாவும், தம்பியும் இருந்தாங்க. அவங்க வீட்டுல சம்பாதிக்கிற ஒரே ஒரு ஆள் அவன் தான்.

ஒரு நாள் மாடுகளை காட்டுக்கு கூட்டிட்டு போகும்போது ஒரு ஆள் அங்கே இருந்த ஆல மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தார். அதை பாத்த உடனே ராமுக்கு ரொம்ப கோபம் வந்தது. 

அந்த ஆள் மரத்தை வெட்டாமல் இருக்க ராமுக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அந்த ஆள் அருகில் சென்று புத்திசாலித்தனமா சொன்னான். “இந்த மரத்த பத்தி உனக்கு தெரியாதா, ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி இந்த மரத்துக்கு ஒரு சாமியார் ஒரு ஆசிர்வாதம் கொடுத்தார். யாரவது இந்த மரத்தை வெட்டினா உடனே இந்த மரத்துக்கு உயிர்வந்து வெட்டுகிறவர்களை கொன்றுவிடும்” என்றான். 

ராமு சொன்னதை கேட்ட அந்த ஆள் அவன் சொன்னதை அப்படியே நம்பி பயந்து ஓடிப் போனான். கொஞ்ச நேரம் கழித்து உர்ண்மையிலே அந்த ஆலமரத்திற்கு உயிர் வந்து ராமுவுக்கு நன்றி சொல்லி அவனுக்கு ஒரு மேஜிக் பெல்லை பரிசாக கொடுத்தது. அதுக்கு ராமு “இது ஒரு சாதாரண பெல் இதை வைத்து என்ன பிரயோசனம்” என்றான். 

“இது ஒன்றும் சாதாரண பெல் இல்லை. இது ஒரு மேஜிக் பெல் நீ இத வச்சு என்ன வேணும்னாலும் சாப்பிடலாம். ஆனால் இதை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்” என்று சொன்னது மரம். ராமு அந்த பெல்லை எடுத்துக்கிட்டு சாயங்காலமா மாடுகளை முதலாளி கிட்ட திருப்பிக் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பினான். 

அவனுடைய அம்மாவும், தம்பியும் ரொம்ப நேரமா சாப்பிடாம பசியோட ராமுக்காக காத்துக்கிட்டு இருந்தாங்க. ராமு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவனோட அம்மா “மகனே ஏன் இவ்வளவு தாமதமாக வந்த என்ன ஆச்சு” என்று கேட்டார்கள். அதற்கு ராமு நடந்ததை எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிவிட்டு “இனி நாம் சாப்பாடு பத்தி கவலையே பட வேண்டாம்மா நமக்கு என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்னு” அந்த பெல்ல அட்டிகிட்டே சொன்னான். உடேன சுவையான சாப்பாடு அவங்க முன்னாடி வந்தது அந்த ராத்திரி அவங்க நல்லா சாப்பிட்டுட்டு துங்கினார்கள். 

அடுத்த நாள் காலை ராமு வேலைக்கு கிளம்பி போயிட்டான். ஆனால் அந்தப் பெல்லை வீட்லயே விட்டுட்டு போயிட்டான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது ராமு ரொம்ப பசியோட வந்தான். அந்தப் பெல்லை வைத்து ருசியான சாப்பாடு சாப்பிடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் அவனுடைய அம்மாவும், தம்பியும் முன்னாடியே பெல்ல அடிச்சு சாப்பாட சாப்பிட்டுட்டு ராமுவுக்கு ரொம்ப கொஞ்சம் சாப்பாடு வச்சிருந்தாங்க. 

பெல்ல ஒரு நாளைக்கு ஒரே முறை தான் உபயோக படுத்த முடியும். அதனால் ராமுவால எதுவும் பண்ண முடியவில்லை. அந்த சாப்பாடு ராமுக்கு போதுமானதாக இல்லை. அதனால் அவன் ரொம்ப கோவமாக இருந்தான். 

“இந்த மேஜிக் பெல் என்னுடையது, என் அம்மாவும், தம்பியும் நல்லா சாபிட்டுட்டு எனக்கு கொஞ்ச சாப்பிட வைச்சிடாங்க. அதனால நான் இனி இந்த பெல்ல என்னுடனே வச்சுக்க போறேன்” என்று ரொம்ப சுயநலமா யோசித்தான் ராமு. அடுத்த நாள் காலைல பெல்லை அவனுடனே கொண்டு போனான். அவன் அம்மாவும், தம்பியும் பெல்லை வீடு முழுவதும் தேடுனாங்க ஆன கிடைக்கவில்லை.

சாயங்காலம் ராமு வீட்டுக்கு திரும்பி வந்ததும் ராமுவோட தம்பி ராமுவிடம் “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது, நான் ரொம்ப நேரமா நீ கொண்டு வந்த பெல்லை தேடிட்டு இருக்கேன் ஆனால் எவ்வளவு தேடியும் அது கிடைக்கல” என்று சொன்னான். 

உடனே தன்னோட சட்டை பாக்கெட்டில் இருந்து அந்த பெல்லை எடுத்து தம்பி கிட்ட காட்டினான் ராமு. இதை பார்த்து கொண்டிந்த ராமுவோட அம்மா அவன்கிட்ட ரொம்ப கோவப்பட்டாங்க. “நீ இந்த பெல்லை உன்னுடன் கொண்டு சென்றாயா!, உன் தம்பி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. 

உன்னோட சுயநலத்துக்காக எங்களை இப்படி விட்டுட்டு போய்விட்டாயே!” என்று கேட்டார்கள். ராமு உடனே தன்னுடைய தப்பை உணர்ந்து தன் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டான். “அம்மா நேற்று எனக்கு நீங்க போதுமான சாப்பிட வைக்கவில்லை. அதனாலதான் சுயநலமாய் யோசித்தேன். இன்னொரு முறை நான் இப்படி சுயநலமாக என் வாழ்க்கையில் எப்பவும் செய்ய மாட்டேன்”  என்று சொல்லி அந்த பெல்லை அம்மாகிட்டயே கெடுத்துட்டான். 

இந்த கதையோட நீதி என்னவென்றால் நம்ம எப்பவுமே சுயநலமா யோசிக்க கூடாது.Leave a Comment