புத்திசாலி முயல் |  தமிழ் கதைகள் | Clever rabbit | story for tamil

புத்திசாலி முயல் |  தமிழ் கதைகள் | Clever rabbit | story for tamil

ஒரு காட்டுல ஒரு அழகான குளம் இருந்தது. அந்த காட்டின் நடுவுல ஒரு தீவு மாதிரி ஒரு இடம் இருந்தது. இந்த தீவுக்கு போவதற்கு அந்தக் குளத்தை கடந்து தான் போகணும். 

அந்த தீவில் சுவையான பழங்களும், காய்கறிகளும் இருந்தது. அந்த காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் அங்க இருக்கிற பழங்களை சாப்பிட ஆசை. ஆனால்! யாருக்குமே அந்த இடத்திற்கு போக தைரியம்  இல்ல. 

ஏன்னா அந்த குளத்தில் நிறைய முதலைகள் இருந்தது. ஒரு நாள் அதே காட்டில் வாழ்ந்து வந்த முயல் தண்ணி குடிக்க குளத்திற்கு போனது. அப்போது அந்த தீவை பார்த்து யோசித்தது. 

“எனக்கு அந்த தீவுக்குப் போய் அங்கு இருக்கும் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட ஆசை ஆனால் இந்த முதலைகளிடம் இருந்து தப்பிச்சு எப்படி அங்க போகிறது” என்று ரொம்ப யோசித்தது முயல்.

முயலுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அடுத்த நாள் காலையில் முயல் குளத்திற்கு வந்து எல்லா முதலைகளையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டது. எங்களை இப்படி கூப்பிட யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று முதலைகள் கோபத்துடன் முயல் அருகில் வந்தன. 

“உங்ககிட்ட ஒன்று சொல்லனும். என்ன எதுவும் செய்ய மாட்டீங்கனு எனக்கு சத்தியம் பண்ணுங்க” என்று முயல் சொன்னது. அதற்கு “கவலைப்படாமல் சொல்லு நாங்கள் உன்னை எதுவுமே பண்ண மாட்டோம்” என்று ஒரு முதலை சொன்னது. 

crocodile-story-for-tamil

“இந்த காட்டு ராஜா இங்கே இருக்கும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு பெரிய விருது வைக்கணும்னு நினைக்கிறார். அதுக்கு காட்டில் இருக்க விலங்குகளோட ஒரு பட்டியல் ரெடி பண்ணுனாரு. நீங்க சம்மதித்தால் நீங்க எத்தனை பேரு இருக்கிறிங்கனு எண்ணுவதற்கு சொன்னாரு. உங்களை எண்ணி மொத்தம் எத்தனை பேர் என்று நான் ராஜா கிட்ட சொல்லுவேன் ” என முயல் சொன்னது. 

எல்லா முதலைகளும் அவங்களுக்குள்ளே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டது. அதற்கு அப்புறம் ஒரு முதலை “சரி நீ எங்களை எப்படி எண்ணுவாய்” என்று  கேட்டது. “எல்லாரும் ஒருவர் பின் ஒருவர் ஒரே வரிசையில நில்லுங்க நான் உங்க முதுகுமேல ஏறி குதித்து, ரொம்ப ஈசியாக எண்ணி விடுவேன்” என்று சொன்னது முயல்.

முயல் சொன்னபடியே எல்லா முதலைகளும் செய்தது. அந்த வரிசை குளத்தோட கரையிலிருந்து தீவோட கரை வரைக்கும் இருந்துச்சு. முயல் உடனே முதலைகளின் முதுகின்மேல் குதித்து, குதித்து வெற்றிகரமாக தீவுக்குப் போய் சேர்ந்தது.

அந்த நாள் முழுக்க முயல் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு நன்றாக ஒய்வு எடுத்து சாயங்காலம் தீவோட கரைக்கு வந்தது. காலைல போன முயல் ஏன் இன்னும் திரும்பி வரலனு தீவின் கரையிலயே காத்திருந்த முதலைகள் முயலப் பார்த்ததும் “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தனு” கேட்டது. 

“அதிக எண்ணிக்கையில் இருக்கும் உங்களை எண்ணுவதில் கொஞ்சம் பிழை ஏற்பட்டு விட்டது. உங்கள எவ்வளவு பேர் என எண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னும் ஒரு முறை காலையில இருந்தது போல அந்த வரிசையில் நில்லுங்க இந்த முறை நான் கண்டிப்பா சரியாக எண்ணிடுவேன்” என்று முயல் சொன்னது. 

எல்லாம் முதலைகளும் முயல் சொன்னதை நம்பி மறுபடியும் வரிசையில் நின்றது. உடனே முயல் முதலைகளின் முதுகில் குதித்து குளக்கரைக்கு பத்திரமா சென்றது. 

முயல் புத்திசாலித்தனமாக முதலைகள் கிட்ட இருந்து தப்பிச் சென்றதைப் போல நாமும் இப்படித்தான் இடத்துக்கு ஏத்த மாதிரி யோசித்து நாம நினைத்ததை செய்ய வேண்டும்.Leave a Comment