40. தெனாலிராமனின் முடிவு! | தென்னாலிராமன் கதைகள் | The end of Tenali Rama! | Tenali Raman story

40. தெனாலிராமனின் முடிவு! | தென்னாலிராமன் கதைகள் | The end of Tenali Rama! | Tenali Raman story

மனதில் எவ்வளவு வல்லவராயிருந்தாலும் மரணத்தை வெல்ல முடியாது! அதற்கு தெனாலிராமனும் விதி விலக்கல்ல! ஒரு நாள் தெனாலிராமன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, ஒரு நல்லபாம்பு அவனைக் கடித்துவிட்டது.

இறக்கும் தருவாயிலிருந்த இராமன் தன் அரசரைக் கடைசியாக ஒருமுறை காணவேண்டுமென்று ஆசைப்பட்டான். அப்போது அரசியல் அலுவல்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணதேவராயர், 

“நம் தெனாலிராமனா இவ்வளவு சீக்கிரத்தில் மடிந்திருப்பான்? அவன் எமனையும் ஏமாற்றக்கூடிய கோமாளியாயிற்றே! ஏதோ வேடிக்கை செய்யத்தான் செத்தவனைப்போல் நடிக்கிறான் போலும்! அந்த வேடிக்கையை வந்து பார்ப்பதற்கு எனக்கு இப்போது சந்தர்ப்பமில்லை!” என்று கூறிச் சிரித்தார்.

 

Krishna Thevarayar tenali Raman story

அரசரைக் காணாமலே உயிர் துறக்கும் போது தெனாலிராமன் “விகடகவியின் பேச்சை நம்பமறுக்கிறார் போலும், என் மதிப்பிற்குரிய அரசர் உண்மையில் நான் மரணமடைந்ததைக் கேட்டால் மிகவும் வருந்துவார்!” என்று சொல்லிக் கண்ணீர் வடித்து பத்திரகாளியை நினைத்து “என் தாயே! உன்னுடைய தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது முகங்களும் எங்கே?” என்று கடைசி மூச்சு விடும் சமயத்திலும் விகடம் செய்து எமனையும் நோக்கிச் சிரித்தபடியே உயிர் துறந்தான். 

அவனுடைய விகடசாமார்த்தியங்களை வழி வழியாக கேட்டு இன்னும் உலகம் சிரித்துக் கொண்டிருக்கிறது.




Leave a Comment