33. வீரர்களின் கர்வத்தை அடக்குதல் | தமிழ் கதைகள் | Suppressing the arrogance of the soldiers | Tenali Raman story

33. வீரர்களின் கர்வத்தை அடக்குதல் | தமிழ் கதைகள் | Suppressing the arrogance of the soldiers | Tenali Raman story

ஒரு நாள் அரசவையில் பல பிரபுக்கள் தாங்கள் யுத்தத்தில் செய்த வீரச் செயல்களைப் பற்றி தற்பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தனர். 

அவற்றையெல்லாம் மிகப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமனோ, “நீங்கள் செய்ததெல்லாம் நான் செய்த வீரச்செயலுக்கு முன்னால் ஒரு தூசுக்குச் சமமாகும். 

நான் யுத்தகளத்தில் எதிரியான சேனாதிபதியின் எதிரே சென்று அவனுடைய கால்களில் ஒன்றை வெட்டிவிட்டேன்!” என்றான். 

tenali Raman
tenali Rama

அனைவரும் அதைக்கேட்டு ஆச்சரியமடைந்து “அவனுடைய தலையை வெட்டாமல் ஏன் காலை வெட்டினாய்?” என்று கேட்டனர். 

அதற்கு தெனாலி ராமன், “அவனுடைய தலையை எனக்கு முன்னால் வேறு எவனோ வெட்டிக்கொண்டு போய்விட்டானே!” என்றான். அதைக்கேட்டு அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.Leave a Comment