34. எலிகளைக் கொல்வது எளிதல்ல! | தமிழ் கதைகள் | Killing rats is not easy! | tenali Raman story

34. எலிகளைக் கொல்வது எளிதல்ல! | தமிழ் கதைகள் | Killing rats is not easy! | tenali Raman story

வீட்டில் தொல்லை கொடுக்கும் எலிகளைக் கொல்லத் தெனாலிராமன் ஒரு பூனை வளர்த்தான். அந்தப் பூனை பக்கத்து வீட்டுக் காரர் வளர்த்த கிளியைக் கொன்று விட்டது. 

பக்கத்து வீட்டுக்காரனோ ஆத்திரம் கொண்டு என்ன சொல்லியும் கேளாமல் அந்தப் பூனையைக் கொன்றுவிட்டான். 

மறுநாள் அவனுடைய வீட்டிற்கு தெனாலிராமன் ஒரு பெட்டி நிறைய எலி களை அனுப்பி, “ஐயா! பூனையின் உதவியில்லாமல் எலிகளைச் சுலபமாகப் பிடிக்க முடியும் என்று நீ கூறியதை நிரூபிப்பதற்காக  இப்பெட்டி நிறைய எலிகளை அனுப்பியிருக்கிறேன்!” என்று கடிதமும் அனுப்பினான்.

அவ்வெலிகள் பக்கத்து வீட்டுக்காரனின் பட்டுத் துணிகளைக் கடித்துப் பாழாக்கியதுமல்லாமல், அவற்றை விரட்டி விரட்டி அவன் அடித்துக் கொல்லும்போது, இரத்தினச் சமுக்காளம் முதலானவையும் கெட்டுப் போயிற்று!
Leave a Comment