31. குதிரை தூக்க முடிந்த எடை | தமிழ் கதைகள் | The weight which the horse can lift | tenali Raman story

31. குதிரை தூக்க முடிந்த எடை | தமிழ் கதைகள் | The weight which the horse can lift | tenali Raman story

கிருஷ்ண தேவராயரின் போர்க் குதிரை ஒன்றின் மீதேறி சவாரி செய்ய தெனாலிராமன் ஆசைப்பட்டான். 

ஆனால் முரட்டுக் குதிரை மீது ஏறியதும் அது குபீரெனக் கிளம்பி அவனைக் கீழே தள்ளிவிட்டது. 

அதைக்கண்டு இராயர் ஏளனமாகச் சிரித்தார். ராமனோ சிறிதும் விட்டுக்கொடுக்காமல் “அரசே! இந்தக்குதிரை இதுவரை என்னை விட எடையும், பலமும் குறைந்தவர்களையே சுலபமாகத் தூக்கிச் சென்றிருக்கிறது.

இதனால்தான் நீங்களும் இதன் மீது சவாரி செய்திருக்கிறீர்கள்! ஆனால் என்னுடைய எடை அது தூக்க முடியாதளவு பளுவாக இருந்ததால் பாரம் தாங்காமல் என்னைச் கீழே தள்ளிவிட்டது!” என்று சிரித்தான்.Leave a Comment