30. தேகத்திற்கு மிகுந்த சுகத்தையளிப்பது! | தமிழ் கதைகள் | Giving great comfort to the reservoir! | tenali Raman story

30. தேகத்திற்கு மிகுந்த சுகத்தையளிப்பது! | தமிழ் கதைகள் | Giving great comfort to the reservoir! | tenali Raman story

ஒரு சமயம் அரசவையில் இராஜகுரு, “நம்முடைய தயாளகுணம் நிரம்பிய மன்னர் பெருமான் தரும் விருந்தைப் போன்று தேகத்திற்கு சுகத்தையளிப்பது இப்பூவுலகில் வேறெதுவுமில்லை!” என்று பெருமையுடன் கூறினார்.

அதை எதிர்ப்பவன் போல் தெனாலிராமன் துள்ளியெழுந்து “இல்லை, அந்த விருந்தை உண்ட பிறகு மலம் கழிப்பதுதான் தேகத்திற்கு அதிகமான சுகத்தையளிக்கும்!” என்று கூறி அதை நிரூபிப்பதற்காக அரச விருந்து முடிந்து.

மாலை மலம் கழிக்கவேண்டிய நேரத்திலே அரசரையும் இராஜகுருவையும் அழகான சித்திரக்கூடத்தில் அடைத்துவைத்து மலங்கழிக்க முடியாதபடி வெகுநேரம் அவஸ்தைப்படவைத்த பிறகே கதவைத் திறந்து விட்டான்.

அவர்கள் மலம் கழித்து விட்டு வந்ததும், “ஆகா, எவ்வளவு சுகமாயிருக்கிறது!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்!
Leave a Comment