19. தலை காட்டாமல் திரிந்தது! | தமிழ் கதைகள் | Wandered without showing head! | tenali Raman story

19. தலை காட்டாமல் திரிந்தது! | தமிழ் கதைகள் | Wandered without showing head! | tenali Raman story

அரசரையே முன்பு அவமானப்படுத்தத் துணிந்த தெனாலிராமன் அரசவையில் என்ன தான் செய்யமாட்டானென்று அவையிலிருந்தவர்கள் இராயரின் ஆத்திரத்தைக் கிளறிவிடவே, 

“ராமா! நாளை முதல் நீ என் முகத்திலோ அரசவையிலோ தலை காட்டக் கூடாது! மீறினால் உனக்குச் சரியான சவுக்கடி கொடுப்பேன்!” என்று ஆணையிட்டார்.

Krishna Thevarayar tenali Raman story
Krishna Thevarayar

மறு நாள் இராயர் தர்பாருக்குச் செல்லுமுன் அரசவையில் தெனாலி ராமன் வந்து கோமாளித்தனம் செய்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டு, “ஆகா! என் ஆணையை மீறித் தலைகாட்டினானா?” என்று ஆத்திரத்துடன் வந்து பார்த்தார். 

ஆனால் தெனாலிராமன் அங்கு தலையின் மீது ஒரு பானையைக் கவிழ்த்து மூடிக்கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் வாய்விட்டுச் சிரித்து அவனை மன்னித்து விட்டார்.Leave a Comment