21. தலை தப்பிய மூளை! | தமிழ் கதைகள் | The brain that escaped the head! | tenali Raman story

21. தலை தப்பிய மூளை! | தமிழ் கதைகள் | The brain that escaped the head! | tenali Raman story

தெனாலிராமனின் தலையை வெட்டும்படி இராயரால் கட்டளையிடப்பட்ட காவலாளிகள் இருவரும் முன்பு இராமனின் தந்திரத்தால் சவுக்கடிபட்டவர்கள் ஆகையால் தலையை வெட்டாமல் விடமாட்டார்கள் என்று ராமன் எண்ணி, மனதிற்குள் ஓர் உபாயத்தைத் தேடிக்கொண்டு, 

“அரசே! சாகப்போகும் என் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். நான் இவ்வளவு நாளும் சூரியபகவானைத் தியானித்ததில்லை. இறக்கும்போது தண்ணீரில் கழுத்தளவு வரை நின்று சூரிய பகவானைப் பிரார்த்தனை செய்தபடியே சாக விரும்புகிறேன். 

பிரார்த்தனை செய்து முடித்தபின் நான் வெட்டுங்கள் என்று சொன்ன பின்புதான் உங்கள் காவலாளிகள் என் தலையை வெட்ட வேண்டும்!” என்றான்.

மன்னரும் அதற்கு உடன்பட்டார். அதன் பின்னர் தெனாலிராமன் ஆற்றிலிறங்கி கழுத்தளவு நீரில் நின்றான். அவன் தப்பி விடாதபடி பாதுகாப்பாக இரண்டு முரட்டுக் காவலாளிகளும் அவனது இருபுறமும் நீரில் நின்றபடி “அவன் எப்போது வெட்டுங்களெனச் சொல்வான்” என்று எதிர்பார்த்து தங்களுடைய நீளமான பட்டாக்கத்திகளை உருவி நீட்டிக்கொண்டு தயாராயிருந்தனர். 

Krishna Thevarayar tenali Raman story
Krishna Thevarayar

ஆற்று நீரில் கழுத்தளவு தண்ணீரில் சூரிய பகவானை தியானிப்பவன் போல் நின்ற தெனாலி ராமன் “வெட்டுங்கள்!” என்று சொல்லி விட்டுச் சட்டென்று தண்ணீருக்குள் மூழ்கி விட்டான். சட்டென்று ஒரே சமயத்தில் கத்திகளை வீசிய காவலாளிகள் தங்கள் தலைகள் அறுப்புண்டு விழுந்தார்கள். 

மறுதினம் மன்னர் பிரானின் கோபம் சற்று குறைந்திருந்த சமயமறிந்து தெனாலிராமன் அவரிடம் “அரசே! சித்திரக்கூடச் சுவர் அலங்கோலமானதைவிட ஒரு விகடகவியின் உயிர் பெரிது என்று நினைத்தபடியால் நான் தலைதப்பி வந்தேன்! 

நீங்கள் என் தலையை வெட்ட அனுப்பிய காவலாளிகள் மூடர்களாகவும், இலஞ்சம் வாங்கும் முரடர்களாயுமிருந்த படியால், தங்கள் தலைகளையே வெட்டிக்கொண்டு மடிந்தார்கள்!” என்று நடந்ததைக் கூறினான் இராயரும் மன்னித்துவிட்டார்.Leave a Comment