29. கிளியின் தெய்வப் பக்தி! | தமிழ் கதைகள் | parrots devotion to the gods! | tenali Raman story
இராயர் சில அபூர்வமான கிளிகளை வளர்த்து, “கிருஷ்ணா! ராமா! கோவிந்தா! அச்சுதா! அனந்தா!” என்று பகவானின் திரு நாமங்களை ஒயாமல் சொல்லும்படி அவற்றிற்குக் கற்பித்து பழக்கப்படுத்திவிட்டு, “என்னுடைய கிளிகளுக்குள்ள கடவுள் பக்தி மனிதர்களிடம் கூடக் காணமுடியாது!” என்று பெருமையாகச் சொன்னார்.
அப்போது தெனாலிராமன் “இல்லை அரசே! பகுத்தறிவுள்ள மனிதர் தான் பக்திமானாகவோ, பக்தியற்ற நாஸ்திகனாகவோ இருக்கமுடியும்! தாங்கள் கிளிகளுக்கு கொடுக்கும் இனிப்புப் பண்டங்களைத் தின்ன ஆசைப்பட்டுத் தான் அக்கிளிகள் இறைவனின் திருநாமத்தைச் சொல்கின்றனவே தவிர உண்மையில் அவை பக்தியால் சொல்லவில்லை.
அதை நான் நிரூபித்துக் காட்டாவிட்டால் என்னைத் தண்டியுங்கள்!” என்று கூறிவிட்டுக் கிளிக்கூண்டுகளின் அருகே ஒரு முரட்டுப் பூனையைக் கொண்டுவந்து விட்டான். கிளிகள் பயத்தால் “கீக் கீக் கீக்” என்று கத்தினவே தவிர “ராமா கோவிந்தா என்று சொல்!” என்று இராயர் எவ்வளவு வற்புறுத்தியும் சொல்லவில்லை!