5. தெனாலி அரண்மனை விகடகவியாதல் | தெனாலி ராமன் கதைகள் | Demolition of Denali Palace tenali Raman story

5. தெனாலி அரண்மனை விகடகவியாதல் | தெனாலி ராமன் கதைகள் | Demolition of Denali Palace tenali Raman story

மறு நாள் அரசவையினுள் தெனாலிராமன் சென்ற போது அங்கு இராஜ குருவால் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு தத்துவஞானி, மாயா தத்துவத்தைப் பற்றி விவாதம் செய்தான்.

“கண்ணால் காண்பது, நாக்கால் ருசிப்பது முதலான நாம் அனுபவிப்பதாகத் தோன்றும் அல்லது செய்யும் ஒவ்வொரு காரியமும் நாம் நினைக்கும் எண்ணங்களினாலே ஏற்படும் வெறும் மனப் பிரமையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி சபை அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வாதாடினார். 

 அதைக் கேட்ட தெனாலிராமன் அவரை நோக்கி, “ஒய் தத்துவஞானியே! நாம் சாப்பிடுவதும் வெறும் பிரமைதானா? நாம் சாப்பிடுவதற்கும் சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வித்தியாசமில்லையா?” என்று கேட்டான்.

Tenali Raman

அதற்கு அந்தத் தத்துவ ஞானி, “இல்லை!” என்று ஆணித்தரமாக பதிலளித்தார். உடனே தெனாலிராமன், “அப்படியானால் இன்று மன்னர் பெருமான் ஏற்படுத்தியிருக்கும் அறுசுவை விருந்தில் நாம் எல்லோரும் கலந்து கொண்டு நன்றாகச் சாப்பிடலாம்.

அப்போது இந்தத் தத்துவஞானி மட்டும் சாப்பிடாமல் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு வயிற்றை நிரப்பட்டும்!” என்று கூறினான்.

உடனே சபையினர் கலகலவென்று சிரித்தனர். தத்துவஞானி தலைகுனிந்தார். அரசர் தெனாலி ராமனது நகைச்சுவையால் மகிழ்ந்து அன்று முதல் அவனை ஆஸ்தான விகடகவி ஆக்கிக் கொண்டார்.

சபையில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரித்து அதை ஆமோதித்தனர். இராஜகுருவும் வேறு வழியில்லாததால் அதை ஆட்சேபிக்க முடியவில்லை.Leave a Comment