இடம் பட வீடு எடேல் | ஆத்திசூடி கதைகள் | Build your house meeting your needs | tamil kathaigal

இடம் பட வீடு எடேல் | ஆத்திசூடி கதைகள் | Build your house meeting your needs | tamil kathaigal

தாணப்பனுக்கு சொந்தமாக சிறிது நிலம் இருந்தது. தன் நிலத்தில் வீடு கட்ட வேண்டுமென்று நினைத்த தாணப்பன், தனக்குத் தெரிந்த தன் நண்பர்களிடம் சென்று பணம் கடனாக வாங்கினான்.

அந்தப் பணத்தைக் தன் நிலத்தில் ஆடம்பரமாக ஓர் பங்களாவைக் கட்ட முடிவு செய்தான். நண்பர்கள் கடனாகக் கொடுத்த பணத்தில் உடனேயே வீடு கட்டத் தொடங்கி விட்டான்.

வீட்டின் கட்டட வேலை முடியும் முன்னரே கையிலுள்ள பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டான் தாணப்பன். அந்த நேரம் பணம் கடனாகக் கொடுத்த நண்பர்கள் எல்லாம் அவனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

money tamil kathaigal 2
money tamil kathaigal 2

அதே நேரம் தாணப்பனுக்கு வீடு கட்டி முடிக்க மீண்டும் பணம் தேவைப்பட்டது. நண்பர்களுக்குத் தவணை கூறிக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், மீண்டும் வேறு நண்பர்களிடம் பணம் கடன் வாங்க ஆரம்பித்தான் தாணப்பன்.

தாணப்பனின் வீட்டு வேலை மீண்டும் தொடர ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட நாளில் வீட்டுவேலை முடியாமல் இழுத்துக் கொண்டே போனது.

இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து முடித்துவிட்ட தாணப்பன் மீண்டும், பணம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்தமுறை யாருமே அவனுக்குப் பணம் கடனாகக் கொடுக்கவில்லை. எல்லோரும் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு தொந்தரவு செய்யத் தொடங்கி விட்டார்கள்.

பணத்தை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமலும், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான் தாணப்பன்.

home construction tamil kathaigal 3
home construction tamil kathaigal 3

நாட்பட நாட்பட நண்பர்களிடம் மிகவும் அவமானப்பட்டான் தாணப்பன். எப்படியாவது நண்பர்களின் கடனை அடைத்து விட வேண்டுமென முடிவு செய்த தாணப்பன், அரைகுறையாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் தன் வீட்டை நிலத்தோடு சேர்த்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டான்.

அதில் கிடைத்த பணத்தைக் யெல்லாம் கொண்டு நண்பர்களின் கடனை அடைத்தான். பேராசைப்பட்டதினால் தனக்கு என்று இருந்த நிலத்தையும் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்று மனம் வருந்தினான்.

நீதி:
ஆடம்பரமாக பெரிதாக வீடுகட்ட நினைக்காமல் கஷ்டப்படாமல் கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு எளிமையாகக் கச்சிதமாக வீடுகட்ட வேண்டும்.

Leave a Comment