சின்ன கருப்பு கோழி | தமிழ் கதைகள் | Little Black Chicken | Moral Stories In Tamil To Read

சின்ன கருப்பு கோழி | தமிழ் கதைகள் | Little Black Chicken | Moral Stories In Tamil To Read

ஒரு பண்ணையில் ஒரு அம்மா கோழியும் நான்கு குஞ்சுகளும் இருந்தாங்க. அந்த நான்கு குஞ்சுகளில் முதல் குஞ்சு கருப்பு கலர்ல இருந்துச்சு. 

அது ரொம்ப சுட்டியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. அந்த குட்டி கருப்பு கோழி பொறுப்போடு வீட்டு வேலைகளை நல்ல நேர்மையான முறையில் செய்தது.

 இரண்டாவது குஞ்சு பண்ணையிலேயே ரொம்ப பேசக்கூடிய குஞ்சு, அந்த குஞ்சு பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளிடம் பேசிட்டு, அதுங்களோட விளையாடிக் கொண்டு இருந்தது. 

மூன்றாவது குஞ்சு தன் அழகுக்கு ரொம்ப நேரம் கொடுத்துச்சு. அது வேலை செய்யாம தன்னோட நேரத்தை அதன் ரெக்கைகளை சரி செய்வதிலும், கண்ணாடி பார்ப்பதிலும் செலவு செய்தது. 

கடைசி குஞ்சு எங்க இருந்தாலும் தூங்கி கொண்டே இருக்கும். தினமும் அந்த கருப்பு கோழி குஞ்சு மட்டும் தான் அம்மா கூட போய் சாப்பிட தானியங்களையும், விதைகளையும் கொண்டுவரும். மற்ற கோழி குஞ்சுகள் யாரும் உதவி பண்ண வர மாட்டாங்க. அவங்க எல்லாரும் அவங்க வேலையில் ரொம்ப பிசியாக இருந்தாங்க. 

அந்த சின்ன கருப்பு கலர் கோழி குஞ்சும், அம்மாவும்  நிலங்களில் விதைகளை விதைத்து அறுவடை பண்ணி அதை ரொட்டிக்கு ரெடி பன்னுவாங்க. 

அம்மா கோழியும், சின்ன கருப்பு கலர் கோழி குஞ்சும் விதைகள் மற்றும் ரொட்டியுடன் வீட்டுக்கு வரும்போது மற்ற மூன்று குஞ்சுகளும் ஓடி வந்து  எல்லாத்தையும் சாப்பிட ஆரம்பிச்சுருவாங்க.

இப்படியே சில வாரங்கள் போச்சு. பின்னர் கலர் கோழி குஞ்சு அம்மா கிட்ட போய் “நம்ம கஷ்டப்பட்டு வேலை பண்ணுறோம் ஆனா மத்த குஞ்சுகள் சாப்பிட்டு ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க” என்று சொல்லிச்சு. 

அம்மா  கோழி தன் குஞ்சுகள் குணத்தை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டது. “அம்மா என்னதான் நீங்க வருத்தப்பட்டாலும் அவங்க மாறப்போவதில்லை. அம்மா அவங்ககிட்ட ஒரு மாற்றத்தை பாக்கணும்னா நாம ஒரு நல்ல தீர்வை யோசிக்கணும். 

என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்று கருப்புக் கோழி தன்னோட ஐடியாவா அம்மாகிட்ட சொல்லிச்சு. அம்மாவும், கருப்பு குஞ்சும் தினமும் வேலை முடிந்து  சாப்பாடு இல்லாமல் மூணு நாள் வந்தாங்க. அதனால் மத்த மூன்று குஞ்சுகள் சாப்பாடு இல்லாம தினமும் பசியோடு இருந்தாங்க. 

முன்னாடி அந்த இரண்டாவது கோழி குஞ்சு மத்தவங்களோட பேசிட்டே இருந்து. ஆனால் இப்போ சாப்பாடு இல்லாம அதால ஒரு வார்த்தை கூட பேச முடியல. மூன்றாவது  கோழிக்கு ரொம்ப பசியா இருந்து அதால அழகை ரசிக்க முடியல. நான்காவது குஞ்சுக்கு பசியால சரியா தூங்க முடியல. 

நான்காம் நாள் அம்மா சாப்பாடு கொண்டு வீட்டுக்கு வருவாங்க என்று அந்த மூன்று குஞ்சுகளும் ரொம்ப எதிர்பார்த்து இருந்தது. அம்மா வீட்டுக்கு வந்த உடனே மூன்று கோழிகளும் ஓடி வந்து சாப்பாடு கேட்டாங்க, அதற்கு அம்மா கோழி சொன்னது “அக்காவும், நானும் தனிமையில நிறைய சாப்பாடு தினமும் கொண்டு வர முடியாது.

எங்க ரெண்டுபேரால எல்லா வேலைகளையும் தனியா செய்ய முடியாது. நீங்க எல்லாரும் வந்தா தான் வேலை ரொம்ப ஈசியா இருக்கும். அதனால நாளையிலிருந்து நீங்கள் எல்லாரும் எங்களோட வரணும்” என்று சொல்லிட்டு ஒரு சின்ன துண்டு ரொட்டியை தான் பசங்களுக்கு கொடுத்து. 

அந்த நாளில் இருந்து மற்ற எல்லா குஞ்சுகளும் தன் அம்மாவோடும், அக்காவோடும்  வேலைக்காக வெளியே போக ஆரம்பிச்சாங்க. அவங்க சோம்பேறித்தனத்தை ஓரம் போட்டுட்டு வேலை செய்யவும், சமைக்கவும் ஆரம்பிச்சாங்க அம்மா கோழிக்கு இப்படி ஒரு மாற்றத்தை தன் குடும்பத்தில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். 

கருத்து: சோம்பேரி தனம் இல்லாம வேலை பண்ண வேண்டும். 



Leave a Comment