28. கொட்டாவி விடாதவர்? | தமிழ் கதைகள் | Who does not yawn? | tenali Raman story

28. கொட்டாவி விடாதவர்? | தமிழ் கதைகள் | Who does not yawn? | tenali Raman story

இராயரின் பட்டமகிஷியான திருமலாம்பாள் ஒரு நாளிரவு கொட்டாவி விட்டதைக் கண்டு அருவருப்புற்ற இராயர் அது முதல் அவளுடைய அந்தப்புரத்திற்கு போகாமலிருந்து வந்தார். 

அதையறிந்த ராமன் இராயரின் மனதைத் திருத்துவதாக இராணிக்கு வாக்களித்து விட்டு அரசவைக்கு வந்தான். அப்போது அங்கு பொருளாதார நிபுணர்களெல்லாம் ஒன்றுகூடி நாட்டின் விவசாயப் பகுதியில் நெல் உற்பத்தியை அதிகப்படுத்தும் திட்டம் பற்றி அரசனிடம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.

tenali Raman
tenali Rama

அப்போது ராமன் ஒரு புதுமாதிரியான நெல்லைக் கொண்டுவந்து சபையோருக்குக் காண்பித்து, “அரசே! அறிஞர்களே! இந்த வகையான நெல்லை விதைத்துச் சாகுபடி செய்தால் மூன்று மடங்கு அதிகமாக விளைச்சல் உண்டாகும்! ஆனால் இந்த அழகிய நெல்லை விதைத்துத் தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்பவர் தங்கள் விடாதவர்களாயிருக்க வேண்டும்” என்றான். 

அப்படிக் வாழ்நாளில் கொட்டாவியே  விடாதவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதை அறிந்த இராயர் தம் மனைவியிடம் தாம் நடந்து கொண்டதற்குப் புத்தி புகட்டவே தெனாலிராமன் அவ்வாறு சொன்னான் என்பதை உணர்ந்து மனந்திருந்தி திருமலாம்பாளின் அந்தப்புரத்திற்கு மறுபடி போகலானார்.



Leave a Comment