ஏழைத்தாயின் மகன் | Son of a Poor Mother | Tamil Kathaigal For Kids

ஏழைத்தாயின் மகன் | Son of a Poor Mother | Tamil Kathaigal for Kids

ஒரு ஊரில் மகாராஜா ஒருவர்  இருந்தார். அவர், தன் நாட்டு மக்களை மிகவும் நன்றாக வழி நடத்திக் கொண்டு இருந்தார். அனைவரிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகுபவர். அவருக்கு வயதாகியது, எனவே தனக்குப் பின் தன் நாட்டை ஆள இளவரசன் தேவை. அவருக்கு மகன் இல்லாததால் அவர், தன் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு இளைஞனை தன்னுடைய நாட்டுக்கு இளவரசனாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். 

ஒரு நாள் அவர் அந்த நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களையும் தன்னுடைய அரண்மனைக்கு வரவழைத்தார். அவர்களிடம் சொன்னார், “எனக்கு வயதாகி கொண்டே இருக்கிறது எனக்குப் பின் என் நாட்டை ஆள எனக்கு மகன் இல்லாததால் நான் உங்களில் ஒருவனை தான் இந்த நாட்டிற்கு இளவரசனாக தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்றார்”. அவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

அப்போது மகாராஜா அவர்கள்   ஒவ்வொருவருக்கும் ஒரு விதையை கொடுத்துக்கொண்டு சொன்னார், “இந்த விதையை யார் பெரிய செடியாக முளைக்க வைத்து ஒரு மாதத்திற்குள் கொண்டு வர போகிறீர்களோ அவர்கள் தான் என் நாட்டை ஆளும் இளவரசன்” ஆவார் என்றார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு விதையை பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினார். ஒரு மாதம் கழிந்தது அனைவரும் பெரிய பெரிய செடிகளாக அரண்மனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் ஒரு ஏழைத்தாயின் மகன் தன்னுடைய வீட்டிலிருந்து தன் தாயிடம் சொன்னான், “அம்மா ஒரு மாதம் ஆகிவிட்டதே இந்த விதை இன்னும் கொஞ்சம் கூட முளைக்கவில்லை நான் எப்படி இதை அரண்மனைக்கு எடுத்து செல்வேன்” என்று கேட்டார். அதற்கு அந்த தாய் சொன்னார், “பரவாயில்லை மகனே இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டு அதை வளர்த்தெடுக்க முயற்சி செய்தாய்  நீ மகாராஜாவிடம் சென்று, என்னால் அந்த செடியை வளர வைக்க முடியவில்லை” என்று கூறு என்றார்.

poor mother tamil story

அவனும் சரி என்று  அதை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றான். அப்போது மகாராஜா அனைவரும் பெரிதாக செடி வளர்த்திருப்பதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். இந்த ஏழைத்தாயின் மகனிடம் உன்னுடைய செடி எங்கே என்று கேட்டார் அதற்கு அந்த மகன் சொன்னான், “மகாராஜா நான் மிகவும் முயற்சி செய்தேன் ஆனால் என்னால் அந்த விதையை முளைக்க வைக்க முடியவில்லை” என்றான். அப்போது அந்த, “மகாராஜா சந்தோஷமாக சொன்னார் நீதான் என்னுடைய நாட்டை ஆளப்போகும் இளவரசன்” என்றார்.

இதை கேட்ட மற்ற இளைஞர்கள் அனைவரும் அவன் விதையை முளைக்க வைக்கவே இல்லை, நாங்கள் இவ்வளவு பெரிதாக இந்த செடியை வளர்த்துள்ளோம் ஆனால் நீங்கள் அவனை இந்த நாட்டின் இளவரசன் என்று கூறுகிறீர்களே என்று கேட்டனர். அதற்கு அந்த மகாராஜா சொன்னார் இவன் தான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருக்கிறான்.

நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதை வேக வைத்த விதை, அந்த விதை முளைக்கவே முளைக்காது. ஆனால் நீங்கள் எல்லோரும் வேறு செடிகளை இங்கே கொண்டுவந்து பொய் கூறியிருக்கிறீர்கள்.ஆனால் இவன்தான் உண்மையை கூறியுள்ளான். எனவே இவன்தான் இந்த நாட்டை ஆளப்போகும் இளவரசன், என்று அவனுக்கு இளவரசன் பட்டம் கொடுத்தார்.




Leave a Comment