தன்வினை தன்னைச் சுடும் | It will shoot itself | moral stories for kids in tamil
அது ஒரு கடும் குளிர்கால காலைப்பொழுது காடு முழுவதும் பணி பெய்திருந்தது. எல்லா இடங்களுமே அடர்த்தியாக பெய்திருந்த பணியால் பளிச்சென்று வெண்மையாக காட்சியளித்தன. எல்லா பறவைகளும், விலங்குகளும் தம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தன. எதற்குமே இறைக் கிடைக்கவில்லை பசியோடு இருந்தன. மேலும் வெளியே மிகக் குளிராக இருந்ததால் அவை உள்ளேயே முடங்கி கிடந்தன.
ஆனால் அவற்றுள் ஒரு பிராணிக்கு தூக்கமே வரவில்லை. அது ஒரு வெட்டுக்கிளி. அதிகமாக சத்தம் எழுப்பும் பிராணி அது. எல்லா உயிரினங்களுமே தூங்கிக் கொண்டிருந்ததால் அதற்கு பொழுது போகவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க அது விரும்பியது.
வெளியே வந்தவுடன் காடு முழுவதும் வெண்மையாக இருப்பதைக் கண்டது. காண்பதற்கு காடு மிக அழகாக இருந்ததால் வெட்டுக்கிளிக்கு பாட வேண்டும் போல் இருந்தது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தத்தி தத்திச் சென்று ஒரு மரத்தை அடைந்தது. சத்தமாக பாடத் தொடங்கியது. தன் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து பாட்டுக்கு தாளம் போட்டு உல்லாசமாக இருந்தது.
அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் ஓர் ஆந்தை வாழ்ந்து வந்தது. கடும் குளிராக இருந்ததால் இத்தனை நாட்களாக அது தூங்கிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளியின் சத்தமான பாட்டை கேட்டு ஆந்தை கண் விழித்தது. “யார் இந்த சத்தமாக பாடும் பிராணி, என் குளிர்கால தூக்கத்துக்கு இடையூறாக இருப்பது?” என்று ஆந்தை தனக்குள் கேட்டுக் கொண்டது.
பொந்திலிருந்து தலையை நீட்டி ஆந்தை வெளியே பார்த்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தவாறு வெட்டுக்கிளி ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. தன் தூக்கத்திற்கு இடையூறு செய்த வெட்டுக்கிளி மீது ஆந்தைக்கு கடும் கோபம் ஏற்பட்டது. ஒரு குளிர்கால காலைப் பொழுதில் திடீரென்று எழுப்பப்பட்டதால் அதற்கு மிகவும் பசித்தது.
பாடிக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளியை சத்தமில்லாமல் ஆந்தை நெருங்கியது. தன்னுடைய அலகால் அந்த முட்டாள் வெட்டுக் கிளியை பிடித்த சாப்பிட்டது.
பொந்துக்குத் திரும்பிய ஆந்தை குளிர்காலம் முடியும் வரை நிம்மதியாக தூங்கியது. எல்லா பிராணிகளைப் போல வெட்டுக்கிளியும் தன் இருப்பிடத்திலேயே குளிர்காலம் முழுவதும் இருந்திருந்தால் அனாவசியமாக தன் உயிரை இழந்து இருக்காது.
நீதி : விவேகமற்ற வேகம் விபத்தை தரும்.