மின்மினி பூச்சியின் காகமும் | Firefly and crow | short moral stories in tamil
முன்பொரு காலத்தில் காட்டில் மின்மினி பூச்சி ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கும் இங்கும் சந்தோஷமாக ஆடி பாடிக் சுற்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் காகம் ஒன்று அந்த மின்மினி பூச்சி வருவதை பார்த்துக் கொண்டு இருந்தது. அந்த மின்மினிப்பூச்சி அருகில் வந்தவுடன் தன் வாயை திறந்து அதை சாப்பிட முயற்சி செய்தது.
அந்தக் காகத்திடமிருந்து மின்மினி பூச்சி தப்பித்துக் கொண்டது. அது அந்த காகத்திடம் சொன்னது, “நண்பா! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேள்” என்றது. அந்த காகமும், “என்ன சொல்லு” என்றது. அதற்கு அந்த மின்மினி பூச்சி சொன்னது, “என்னை மட்டும் உண்பதால் உன்னுடைய பசி எவ்வாறு அடங்கும் என்னை போல் நிறைய பூச்சிகள் இருக்கும் இடத்தை உனக்கு காட்டுகிறேன் என்னுடன் வா” என்றது.
பேராசை பிடித்த காகம் மின்மினி பூச்சியிடம், “சரி நான் உன்னுடன் வருகிறேன் என்னை அழைத்துக் கொண்டு செல்” என்றது. அந்த மின்மினிப்பூச்சி காகத்தை ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றது. அந்த இடத்தில் சில மனிதர்கள் குளிர் காய்ந்து கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த மனிதர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் இருந்து சில நெருப்பு பொறிகள் வெளியே வந்து கொண்டு இருந்தது. அந்த நெருப்பு பொறிகளை மின்மினி பூச்சி, காகத்திடம் காட்டி சொன்னது, “இங்கு பார்த்தாயா என்னை போல் எவ்வளவு மின்மினிப்பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன”. பேராசை பிடித்த காகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நெருப்பு பொறிகளை போய் சாப்பிட ஆரம்பித்தது.
அந்த நெருப்புப் பொறிகளை சாப்பிட்ட காகத்தின் வாய் உடனே எரிய ஆரம்பித்து விட்டது. உடனே அந்த காகம் சொன்னது, “இது என்ன பூச்சி ? இதை சாப்பிட்டால் இப்படி வாய் எரிகிறதே, எனக்கு இந்த பூச்சி எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.
நீதி : உடல் பலத்தை விட மனப்பலமே பெரிது.