கோபக்கார மகாராஜாவின் மலர் குவளைகள் | தமிழ் கதைகள் | Flower Vases Of Angry King | Tamil King Story
சித்திரசேனா மகாராஜாவிற்கு அவருடைய மலர் குவளைகள்னா ரொம்பவே புடிக்கும். அவருடைய அரண்மனையில் நிறைய அழகான மலர் குவளைகளை சேகரித்து வைத்திருந்தார்.
அதை எல்லாம் பாதுகாக்கவும், சுத்தம் செய்யவும் ஒரு இளைஞனை நியமித்தார். அதுமட்டுமல்ல அந்த குவளைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவனுக்கு தண்டனை கிடைக்கும் எனவும் சொல்லியிருந்தார்.
ஒரு நாள் அந்த இளைஞன் குவளைகளை துணியை வைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவனது கை தவறி அந்த குவளை கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து விட்டது.
அந்த சத்தத்தைக் கேட்ட மகாராஜா உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். உடனே அவர் அந்த இளைஞனிடம், “நீ என்ன பண்ணி வைத்திருக்கிறாய்? என்னுடைய விலை உயர்ந்த பொருளை இப்படி உடைத்துள்ளாய், இதற்கு கண்டிப்பாக உனக்கு தண்டனை உண்டு, இவனை தூக்கில் இடுங்கள்” என்று ஆவேசமாகக் கத்தினார்.
உடனே அந்த இளைஞன் மகாராஜாவிடம், “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என் கை தவறி தான் அந்த குவளை கீழே விழுந்தது” என்று மன்னிப்பு கேட்டான். ஆனால் மகாராஜா அவன் பேச்சைக் கேட்கவே இல்லை.
அந்த இளைஞனிடம் மகாராஜா, “உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கூறு” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “மகாராஜா எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் உள்ளது நான் இறப்பதற்கு முன்பு இந்த கோட்டையில் உள்ள எல்லா குவளைகளையும் பார்க்க வேண்டும் என்று கேட்டார் மகாராஜாவும் தன் சிப்பாய்களிடம் உடனே எல்லாக் குவளைகளையும் கொண்டு வாங்கள்” என்று கூறினார்.
சிப்பாய்கள் எல்லா குவளைகளையும் கொண்டுவந்தார்கள். மகாராஜா அந்த இளைஞனிடம், “எல்லா குவளைகளையும் நன்றாகப் பார் இனிமே உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று கூறினார்.
அந்த இளைஞன் எல்லாக் குவளைகளையும் எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டான் கோபத்தில் மகாராஜா, “இளைஞனே.. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “நான் இன்னொருவரின் உயிரை காப்பாற்றி உள்ளேன்” என்று பதில் சொன்னான்.
மகாராஜா, “என்ன கூறுகிறாய்?” என்று கேட்டார். அவன் சொன்னான், “எப்படியும் என்னை தூக்கில் இட்ட பிறகு இன்னொருவரை குவளைகளை பார்க்க ஏற்பாடு செய்வீர்கள், அப்போது அவன் கையில் இருந்து ஏதாவது ஒரு குவளை கீழே விழுந்து உடைந்தால், அவனை மீண்டும் தூக்கில் இட போகிறீர்கள்” எனவே தான் “நான் ஒருவரின் உயிரை காப்பாற்றி உள்ளேன் என்று கூறினேன்” என்றான் அந்த இளைஞன்.
இதை கேட்டா மகாராஜா ஆச்சரியமடைந்து, “உன்னுடைய பதில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உன்னை நான் மன்னித்து விட்டேன் அது மட்டும் இல்லாமல் என்னுடைய அரசவையில் உனக்கு ஒரு முக்கிய பதவியை கொடுக்க உள்ளேன்” என்று கூறினார்.
நீதி : கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறாகத்தான் இருக்கும்.